“அடுத்த 3 டெஸ்ட் போட்டி.. நான் அந்த மாதிரி இன்னும் நிறைய செய்ய போறேன்” – ரோகித் சர்மா சவால்

0
298
Rohit

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. பேட்டிங்கில் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் மட்டுமே நன்றாக செயல்பட்டார்கள்.

ஆனால் இதைத் தாண்டி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. முதல் இன்னிங்ஸில் கில் முக்கியமான நான்கு கேட்ச்கள் பிடித்திருந்தார்.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ராவின் மிகச்சிறந்த ஸ்பெல்லில் ரூட் மற்றும் பேர்ஸ்ட்டோ கேட்ச்களை ஸ்லிப்பில் நின்று அபாரமாக கில் பிடித்தார். மேலும் ஷார்ட் மிட்விக்கெட்டில் நின்று குல்தீப் ஓவரில் ரேகான் அஹமத் அடித்த பந்தையும் மிகச் சிறப்பான காட்சி பிடித்தார்.

இதற்கடுத்து இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் பந்துவீச்சில் போப் அடித்த பந்தை ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மா பிடிக்க நேரம் இல்லாத பொழுதும் நன்றாக ரியாக்ட் செய்து பிடித்தார். ஆட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையை இது உருவாக்கியது.

இதற்கு அடுத்து பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஒரு கையில் பிக்கப் செய்து அடித்த த்ரோ மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட் செய்து பெற்றார். இந்த இடத்தில் இந்திய அணியின் பக்கமாக இரண்டாவது டெஸ்ட் நூறு சதவீதம் வந்தது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் போப் தந்த கேட்ச் வாய்ப்பை அக்சர் படேல் தவறவிட்ட காரணத்தினால், அந்தப் போட்டியையே இந்தியா தோற்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பீல்டிங் மிகச் சிறப்பாக இந்திய அணிக்கு அமைந்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் சில அற்புதமான கேட்சுகள் எடுத்தோம். மேலும் அருமையான ரன் அவுட் செய்தோம். இவையெல்லாம் ஆட்டத்தை மாற்றக்கூடிய முக்கியமான நிகழ்வுகள். நீங்கள் ஸ்லிப்பில் நிற்கும் பொழுது, எப்பொழுதும் பந்துக்காக தயாராக இருக்க வேண்டும். அமைதியாக இருந்து எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதே அந்த இடத்தில் மிக முக்கியம்.

நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்த போப்புக்கு எதிராகப் பெற்ற அந்த கேட்ச் மிகவும் முக்கியமானது. அந்த இடத்தில் நிற்கும் பொழுது பந்து மிகவும் வேகமாக வந்துவிடும். உங்களுக்கு ரியாக்ட் செய்வதற்கு நேரமே இருக்காது.

இதையும் படிங்க : NZvsSA.. 2வது இன்னிங்ஸிலும் வில்லியம்சன் சதம்.. 10 முறையில் 6 சென்ஞ்சுரி.. மாஸ் பேட்டிங்

மேலும் பந்துக்கு அருகில் உங்கள் உடலையும் கொண்டு செல்ல முடியாது. எனவே உங்கள் கை மட்டும் பந்துக்கு அருகில் சரியாக இருக்க வேண்டும்.சரியான நேரத்தில் சரியான இடத்தில் அமைந்தால் கேட்ச் கிடைக்கும்.இந்தத்தொடரில் இந்த மாதிரி இன்னும்பல கேட்சுக்களை எடுப்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.