“எங்க டீம்ல ரிஷப் பண்ட்டுனு ஒரு பையன் இருந்தான்.. டக்கெட்டுக்கு அவனைத் தெரியாது போல” – ரோகித் சர்மா பேட்டி

0
546
Rohit

இங்கிலாந்து சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் விளையாடி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் விளையாடும் இந்த முறைக்கு ஆங்கில மீடியாக்கள் வாஸ் பால் என பெயரிட்டு பெரிய அளவில் ஹைப்பை உருவாக்கி வந்தன.

இந்த நிலையில் இந்தியா வந்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய இளம் வீரர்கள் கொண்ட அணியிடம் தற்பொழுது டெஸ்ட் தொடரை தோற்று பெரிய விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்திய இளம் அணியில் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். இதுவரையில் அவர் இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் என 655 ரன்கள் குவித்திருக்கிறார்.

இவர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை தனக்கு தேவைப்படும் பொழுது அடித்து விளையாடும் அளவுக்கு திறமைசாலியாக இருக்கிறார். அவர் எப்பொழுது பொறுமையாக விளையாடுகிறார்? எப்பொழுது அதிரடியாக விளையாட மாறுகிறார்? என்று இங்கிலாந்து அணிக்கு சுத்தமாக புரிதல் இல்லை.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடுவது தான் எதிரணியைச் சேர்ந்தவர்கள் அதிரடியாக விளையாடுவதற்கு தூண்டுகோலாக இருக்கிறது என்பது போல ஜெய்ஸ்வாலை கூறி இருந்தார்.

- Advertisement -

நாளை ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே துவங்க இருக்கின்ற காரணத்தினால், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அவரிடம் பென் டக்கெட் கூறியது குறித்தும்கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய ரோஹித் சர்மா ” எங்கள் அணியில் முன்பு ரிஷப் பண்ட் என்ற பையன் இருந்தார். அவன் எப்படி விளையாடினான் என்று டக்கெட் பார்த்திருக்க மாட்டார். பார்த்திருந்தால் அப்படி கூறி இருக்க மாட்டார்.

பாஸ்பால் என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. எனக்கு இன்னும் பாஸ்பால் என்றால் என்னவென்று புரியவில்லை. யார் அதை ஆடி காட்டி இருக்கிறார்கள் என்றும் தெரியாது” இன்று அதிரடியாக கூறியிருக்கிறார்.