ஐசிசி தற்போது புதிதாக வெளியிட்டிருக்கும் டெஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான ரேங்க் பட்டியலில் ஜெய்ஸ்வால் தவிர இந்திய வீரர்களுக்கு பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சுமாராக அமைந்ததின் காரணமாக டெஸ்ட் ரேங்க் பட்டியலில் இந்திய வீரர்களுக்கு இந்த வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
3 வீரர்கள் வெளியேற்றம்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் ரிஷப் பண்ட் 708 புள்ளிகள் உடன் 11ஆவது இடத்திற்கும், விராட் கோலி 688 புள்ளிகள் உடன் 14வது இடத்திற்கும், ரோகித் சர்மா 649 புள்ளிகள் உடன் 24 வது இடத்திற்கும், டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு சரிந்திருக்கிறார்கள். சுப்மன் கில் ஒரு இடம் சரிந்து 622 புள்ளிகள் உடன் 20வது இடத்தில் இருக்கிறார். ஜெய்ஸ்வால் மட்டும் ஒரு இடம் முன்னேறி 790 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவுக்குப் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மூவரும் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா அஸ்வின் சரிவு ரபாடா அசத்தல்
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 860 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். பும்ரா 846 புள்ளிகள் உடன் 3வது இடத்திலும், அஸ்வின் 831 புள்ளிகள் உடன் 4வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 776 புள்ளிகள் உடன் 8வது இடத்திலும் இருக்கிறார்கள்.நான்
இதையும் படிங்க : நான் ஹர்திக் மாதிரி ஆட போறதில்ல.. ஆஸி டெஸ்ட் வாய்ப்ப வேற மாதிரி எதிர்பார்த்தேன் – நிதீஷ் குமார் ரெட்டி பேச்சு
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியல் முதல் 10 இடங்கள் :
ஜோ ரூட் – 903
கேன் வில்லியம்சன் – 813
யஷஸ்வி ஜெய்ஸ்வால் -790
ஹாரி புரூக் – 778
ஸ்டீவன் ஸ்மித் – 757
உஸ்மான் கவாஜா – 728
சவுத் ஷகீல் – 724
மார்னஸ் லபுசேன் – 720
கமிந்து மெண்டிஸ் -716
ரச்சின் ரவீந்திரன் – 711






