நான் ஹர்திக் மாதிரி ஆட போறதில்ல.. ஆஸி டெஸ்ட் வாய்ப்ப வேற மாதிரி எதிர்பார்த்தேன் – நிதீஷ் குமார் ரெட்டி பேச்சு

0
264
Nitish

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் தன்னை தேர்வு செய்திருப்பது குறித்து நிதிஷ் குமார் ரெட்டி பேசி இருக்கிறார்.

இந்திய வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா உருவாக்கிய எதிர்பார்ப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்தில் பந்து வீசி பயிற்சி செய்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக கம்பீர் அதிரடியாக ஹர்திக் பாண்டியாவை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப் போகிறார் என்கின்ற பேச்சுகள் எழுந்தது.

இப்படியான நிலையில் இந்தியத் தேர்வுக்குழு இதைவிட பெரிய ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத நிதிஷ் குமார் ரெட்டியை வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இடத்திற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்து இருக்கிறது.

- Advertisement -

என்னுடைய பாணி இதுதான்

இதுகுறித்து நிதிஷ் குமார் ரெட்டி பேசும் பொழுது “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு எனது பெயர் பரிசீலனையில் இருக்கிறது நான் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்திய ஏ அணியில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக விளையாடிய பிறகு அதை பார்த்து வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நினைத்தேன். நான் அவர்களுக்கு ஏதோ நல்ல விதமாக செயல்பட்டு காட்டி இருக்கிறேன் அதனால் அவர்கள் எனக்கு முன்கூட்டியே வாய்ப்பு கொடுத்து விட்டார்கள்”

“சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தில் ஆரம்பத்தில் நான் பதட்டத்தில் இருந்தேன். போட்டியை எப்படி அணுகுவது என்பது குறித்து சூர்யா பாய் எனக்கு சுதந்திரம் கொடுத்தார். ரன் எடுப்பது மற்றும் விக்கெட் எடுப்பது மூலமாகவே நீங்கள் பதட்டம் இல்லாமல் இருக்க முடியும். எனவே எனக்கு அந்த அனுபவம் ஏற்கனவே இருந்தது. இந்திய அணிக்காக விளையாடும் பொழுது பதட்டம் இல்லாமல் உங்களை சம நிலையில் வைத்திருக்க வேண்டியது முக்கியம். நான் அதைச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். மேலும் அதைத் தொடர விரும்புகிறேன்”

இதையும் படிங்க : கம்பீர் வந்ததும் 3 மோசமான சாதனைகள் வந்திருச்சு.. இன்னொரு மோசமான சாதனையும் காத்திருக்கு – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

“நான் என்னுடைய பாணியை கடைப்பிடிப்பேன். மற்ற ஆல் ரவுண்டர்கள் செயல்படுவது எனக்கு பிடிக்கும். இதனால் நான் அவர்களைப் போல் விளையாடுவேன் என்று அர்த்தம் கிடையாது. சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன். அது அதிரடியாக விளையாடுவதாக இருந்தாலும் செய்வேன். இதை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -