சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற்று வரும் நிலையில், நாளை இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா கடைசியாக டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துவிட்டு டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு மட்டுமே கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வரும் நிலையில், அவரது தலைமையில் இந்திய அணி முக்கிய ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மாவிற்கு பின் அடுத்த கேப்டனாக பும்ரா அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், எதிர்பாராத விதமாக கில் துணை கேப்டனாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். மேலும் அவரே இந்திய அணியின் எதிர்கால கேப்டன் ஆகவும் சீனியர் வீரர்களுக்கு மத்தியில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் அதற்கான காரணம் குறித்து ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.
துணை கேப்டனாக நியமிக்க காரணம்
இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் போது “கில் மிகவும் கம்பீரமான ஒரு வீரர், இந்த அணியில் அவரது திறமை குறித்து ஒரு துளி கூட சந்தேகம் இல்லை. நாங்கள் மூன்று வடிவ தொடர் குறித்து ஆராய விரும்புகிறோம். எந்த வீரரையும் மதிப்பிடுவதற்கு சரியான வழி இதுவல்ல என்று நான் நினைக்கிறேன். சில வீரர்களுக்கு சில வடிவங்களில் அவர்களின் பலம் இருக்கும். ஒரு வடிவம் ஒருவருக்கு சரியாக அமையவில்லை என்றால் மற்ற வடிவமும் அப்படியே இருக்கும் என்று அர்த்தம் இல்லை.
இதையும் படிங்க:இதுக்குதான் வெயிட் பண்ணேன்.. டி20 WC அழுத்தம் இதில் இருக்கு.. காரணம் இதான் – ஒப்புக்கொண்ட விராட் கோலி
ஆஸ்திரேலியாவில் நடந்தது வேறு, எனவே அதை மற்ற வடிவத்தொடருடன் ஒப்பிடக்கூடாது. கில் அணியை பொறுத்தவரை ரன்கள் அபாரமானவை என்பது தெரியும். கடந்த 3-4 வருடங்களாக அவர் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது தெரியும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அவர் துணை கேப்டனாக உயர்த்தப்பட்டதற்கு காரணம் இருக்கிறது. நம்பிக்கையோடு அவர் சிறந்த போட்டியை நடத்துவார். அதை இறுதியில் நாங்கள் அடைய விரும்பும் விஷயங்களை அடைய உதவும்” என்று பேசி இருக்கிறார்.