இதுக்குதான் வெயிட் பண்ணேன்.. டி20 WC அழுத்தம் இதில் இருக்கு.. காரணம் இதான் – ஒப்புக்கொண்ட விராட் கோலி

0
436

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது. இதற்காக விராட் கோலி உட்பட இந்திய அணி வீரர்கள் மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி இந்தத் தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அதற்குப் பிறகு 8 வருடங்கள் ஆக இந்த தொடர் நடைபெறாத நிலையில், தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஒருநாள் தர வரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் இருக்கும் அணிகள் விளையாடுவதால் இந்த போட்டிகள் அனைத்துமே மிகவும் சுவாரசியமான முறையில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் லீக் ஆட்டங்களை தவிர, கால் இறுதி ஆட்டத்தில் எப்படி முன்னணி அணிகள் விளையாடியதோ அதேபோல இதில் லீக் தொடரில் இருந்து முன்னணி அணிகளுக்கு எதிராக ஒவ்வொரு அணியும் விளையாடுகிறது. எனவே இந்த தொடர் நிச்சயமாக அழுத்தத்தின் கீழ் விளையாட வேண்டும் எனவும், அதை தான் எப்போதும் விரும்புவதாக விராட் கோலி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அழுத்தத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்

இதுகுறித்து விராட் கோலி கூறும் போது “இந்தப் போட்டித் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறுகிறது. இது எனக்கு மிகவும் பிடித்த போட்டி தொடராகும். இந்தத் தொடருக்கு தகுதி பெற தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதால் இதன் நிலைத்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிய முடிகிறது. ஒருநாள் போட்டியில் இது ஒரு டி20 உலக கோப்பை அழுத்தத்தை உருவாக்குகிறது.

இதையும் படிங்க:எதுக்கு 5 ஸ்பின் பவுலர்ஸா.? அதுக்கு விளக்கம் நான் தரேன்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன் ரோஹித்

லீக் கட்டத்தில் உங்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆட்டங்கள் மட்டுமே இருக்கும். நீங்கள் இதில் நன்றாக தொடங்கவில்லை என்றால் நிச்சயமாக அழுத்தத்தில் மாட்டிக் கொள்வீர்கள். இதில் முதல் ஆட்டத்தில் இருந்தே அழுத்தம் இருக்கிறது என்பதால் இது எனக்கு மிகவும் பிடிக்கும். முதல் ஆட்டத்தில் இருந்தே நீங்கள் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்று விராட் கோலி பேசி இருக்கிறார். நாளை வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டி நடைபெற உள்ளதால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -