வீடியோ.. மும்பை அணியை தவிர ரோகித் கேப்டன் ஆகா ஆசைப்பட்ட அணி.. பழைய பேட்டியை பகிரும் ரசிகர்கள்

0
11719

தற்போது ஐபிஎல் தொடரில் சந்தை மதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் அணியாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் திறமைகளை கண்டறியும் குழுவைப் போல, வேற எந்த ஐபிஎல் அணிகளிலும் கிடையாது. ஒரு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு குறைந்தபட்சம் அவர்கள் இரண்டு திறமையான வீரர்களையாவது வெளி உலகத்திற்கு காட்டுவார்கள்.

- Advertisement -

இப்படி மும்பை இந்தியன்ஸ் அணி வெளி உலகத்திற்கு காட்டிய வீரர்களாக ஜஸ்பரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா என பெரிய பெயர்கள் இருக்கிறது. நடந்து முடிந்த மெகா ஏலத்தில் திலக் வர்மா மற்றும் நெகேல் வதேரா ஆகியோரை கொண்டு வந்தார்கள்.

இப்படிப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டு வரையில் ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. 2013ஆம் ஆண்டு கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளே வந்ததும் ஐபிஎல் கோப்பையை மும்பைக்கு வென்று கொடுத்தார். இதற்குப் பிறகு அவரது தலைமையில் 2015,17, 19, 20 என ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு மும்பை இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற பொழுது உள்ளே கொண்டுவரப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அவர் தனது இரண்டாவது ஐபிஎல் சீசனை விளையாடுவதற்குள்ளேயே, இந்திய டி20 அணியில் இடம் பிடித்து விட்டார். மேலும் 2016 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் இந்திய அணியில் இடம் பிடித்தார். தற்பொழுது இவரை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த அறிவிப்பு நிறைய விவாதங்களையும், சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர்த்து, வேற எந்த ஐபிஎல் அணிக்காவது கேப்டனாக செல்ல முடியுமென்றால், எந்த அணி என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ரோஹித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் தனிப்பட்ட முறையில் ராசியானது என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ மிக வைரலாக பரவி வருகிறது!