ஐபிஎல் 2025

ரோஹித் ஓய்வு பெற.. மோசமான பேட்டிங் காரணம் இல்லை.. அவர் இதைத்தான் ஆழமா யோசிச்சிருக்கணும் – சிறுவயது கோச் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க வீரர் ரோஹித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலரிடையே ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து அவரது சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லார்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

ரோகித் சர்மா ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்குப் பிறகு டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஹித் சர்மா தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினாலும் தான் தொடர்ந்து விளையாடுவேன் என்று ரோஹித் அறிவித்த நிலையில் தற்போது அவரது முடிவு பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளரான தினேஷ் லாட் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விதம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரது முடிவுக்கு இதான் காரணம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ரோஹித் சர்மா அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. அவர் ஓய்வு பெற்றது அவரது பார்ம் காரணமாக அல்ல. உலகக் கோப்பைக்கு பிறகு அவர் டி20 போட்டிகளில் விளையாட விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டு தொடர்களிலும் தொடர வேண்டும் என்பது அவரது முடிவாகும். ரோஹித் சர்மாவின் இலக்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதாக இருக்கலாம்.

இதையும் படிங்க:ஐபிஎல் நடக்கணுமா.? நான் சொல்றத மட்டும் செஞ்சா.. பிசிசிஐக்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா – இங்கி மைக்கேல் வாகன் ஐடியா

ஆனால் துரதிஷ்டவசமாக நாம் அதற்கு தகுதி பெறவில்லை. ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அவர் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து கவனமாக யோசித்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த முடிவும் வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கும் சம்பந்தம் கிடையாது. கடந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு செய்தது போல அவர் இளம் தலைமுறையினருக்கு வழி விட யோசித்து இருக்கலாம். ரோஹித் சர்மா அடுத்தது 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை வெல்வதே அவரது இலக்காக இருக்கும்” என கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts