“ரோகித் சர்மா புஜாரா தங்களை தாங்களே உதைத்துக் கொள்ள வேண்டும்” – ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனம்!

0
1221
Ravi

இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து பட்டத்தை இழந்தது!

இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி ஐபிஎல் தொடரில் விளையாடி சில வீரர்கள் 10 நாட்களுக்கு முன்பாகவும் சில வீரர்கள் 7 நாட்களுக்கு முன்பாகவும் இங்கிலாந்து சென்றனர்.

- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதற்கான போதிய நாட்கள் கிடைக்கவில்லை என்று தோல்விக்கு பிறகு பேசி இருந்தார்.

இது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் குழுவின் போட்டிக்கான திட்டங்கள் மிகவும் மோசமாக இருந்தது. அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக இதுவே அமைந்தது.

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்தை மிகவும் காட்டமான விமர்சனமாக முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்பொழுது
“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது. அதற்கு முன்னால் 20 நாட்கள் இப்படியான பெரிய தொடருக்குப் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடரை வைத்துக்கொண்டு இவர்களுக்கு இவ்வளவு நாட்கள் கிடைக்காது.

இது பிசிசிஐ முடிவு செய்ய வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் இதை பிசிசிஐ மறுபரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன். ஐபிஎல் தொடருக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிறது என்றால், இந்திய அணி அதற்கு தகுதிப் பெற்று இருக்கிறது என்றால், அந்த நேரத்தில் இந்திய அணி வீரர்களைப் பயன்படுத்துவது தொடர்பாகச் சில சட்டங்கள் ஐபிஎல் தொடரில் கொண்டுவரப்பட வேண்டும்.

ஐசிசி கோப்பைகளை வெல்லுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. ஆனால் மகேந்திர சிங் தோனி அதை அவ்வளவு சுலபமான விஷயமாக நமக்கு காட்டிவிட்டார்.

இந்த இறுதிப் போட்டியில் ஆடுகளம் நடந்து கொண்ட விதம்தான் என்னை ஆச்சரியப்படுத்தியது. ரோகித் சர்மாவும் புஜாராவும் தாங்கள் விளையாடிய ஷாட்களுக்காக தங்களையே உதைத்துக் கொள்ள வேண்டும். நல்ல விதமாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது அப்படி ஒரு மோசமான ஷாட்டை விளையாடினார்கள்!” என்று தெரிவித்திருக்கிறார்!