இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் தனது ஓய்வு குறித்து பேசிய ரோஹித் சர்மா இந்திய அணிக்காக தற்போது எல்லாவற்றையும் செய்யக் கூடிய வீரர் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் ரோகித் சர்மா தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் வரைக்கும் ரோகித் சர்மா விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரர்கள் குறித்து பேசியபோது கேஎல் ராகுல் கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருவதாக கூறி இருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் சர்மா விரிவாக கூறும்போது “கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக கேஎல் ராகுல் எங்களுக்கு முக்கியமான வீரராக இருந்து வருகிறார். நான் அவரை எங்களுக்கு நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக செயல்படும் ஒரு மனிதராக பார்க்கிறேன். ஏனென்றால் அவர் எங்களுக்காக, இந்திய அணிக்காக எல்லாவற்றையும் செய்யக் கூடிய வீரராக இருக்கிறார். கீப்பிங் செய்வது, எங்களுக்காக எந்த நிலையிலும் பேட்டிங் செய்வது என அனைத்தையும் இந்திய அணிக்காக செய்து வருகிறார்” என ரோஹித் சர்மா அவர் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:ரிங்கு சிங்கால் துவண்டு போன என்னை.. விராட் கோலி கொடுத்த இந்த அறிவுரைதான் என் வாழ்க்கையை மாற்றியது – யாஷ் தயால்
கேஎல் ராகுல் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்த போதிலும் இந்திய அணியில் அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா அவரை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார். மேலும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு கேஎல் ராகுல் முக்கிய பங்காற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.