நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முக்கிய பவுலர்களில் ஒருவராக திகழும் யாஷ் தயால் 2023ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்திற்கு பிறகு ஆர்சிபி மற்றும் விராட் கோலி அதிலிருந்து எப்படி மீண்டு வர உதவி புரிந்தார்கள் என யாஷ் தயால் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
2023ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம்
கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய யாஸ் தயால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விட்டுக் கொடுத்தார். ரிங்கு சிங் அவரது ஓவரில் தொடர்ச்சியாக அடித்த 5 சிக்சர்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மேலோக்கி செல்லவும் யாஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை கீழ்நோக்கி செல்லவும் வழி வகுத்தது.
அந்த ஆண்டு குஜராத் அணி இவரை தக்க வைக்காமல் வெளியே விட, கடந்த ஆண்டு பெங்களூரு நிர்வாகம் இவரை தங்களது அணிக்கு வாங்கிக் கொண்டது. ஆர்சிபி அணியில் சிறப்பாக விளையாடிய தயால் சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எம்எஸ் தோனிக்கு எதிராக கடைசி ஓவரில் 15 ரன்கள் பாதுகாத்து ஆர்சிபி பிளே ஆப் செல்ல முக்கிய காரணமாக அமைந்தார். தற்போது இந்த ஆண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையில் விராட் கோலி மற்றும் ஆர்சிபி நிர்வாகம் தனக்கு எப்படி உதவினார்கள் என்பது குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
விராட் கோலி தந்த ஆதரவு
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது ஒரு மிகப்பெரிய விஷயமாகும். இதை நான் முன்பே விளக்கி சொல்லி இருக்கிறேன். விராட் பையா எனக்கு விளக்கி கூறிய விஷயங்கள் என் மனதில் இன்னும் நிற்கின்றன. அந்த சமயத்தில் ஆர்சிபி நிர்வாகம் எனக்கு அளித்த ஆதரவு என்பது மிகப்பெரிய விஷயமாகும். என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டதற்கான காரணம் அப்போதுதான் நடந்தது என்று நான் கூறுவேன்.
இதையும் படிங்க:அப்பாடா நிம்மதி.. பஞ்சாப் டெல்லி போட்டி நிறுத்தப்பட உண்மை காரணம் என்ன?.. பிசிசிஐ கொடுத்த விளக்கம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
போட்டிக்கு முன்பாக எனது பதட்டத்தை கட்டுப்படுத்துவதே எனது செயல்முறையாகும். கவலைப்படுவதற்கு பதிலாக என் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து சிந்திக்காமல் இருக்க முயல்கிறேன். இரண்டாவது விஷயம் என்னவென்றால் 2023 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்திற்கு பிறகு, எனது கவனத்தை பேட்ஸ்மேன் மீது வைக்காமல் எனது செயல்முறையில் மீது வைப்பதே நான் மிகுந்த முக்கியத்துவமாக கருதுகிறேன்” என பேசி இருக்கிறார். இந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பதன் குறிப்பிடத்தக்கது.






