ஐபிஎல் 2025 முடிந்த உடன் ரோகித் எடுக்கப்போகும் முடிவு.. 3 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு

0
75

ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது நீண்ட காலமாக உடல் தகுதியில் இருக்கும் பிரச்சினையை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். ரோகித் சர்மா கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர் இடது கால் ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சினையை சமாளித்து வந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த காரணத்தால், ரோஹித் இதற்கான சிகிச்சையை புறந்தள்ளி விளையாடி வந்தார்.

ஆனால், கடந்த 12 மாதங்களில், அவர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய இரண்டு வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, குறிப்பாக 2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு, ரோஹித் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இந்த அறுவை சிகிச்சை 2025 ஐபிஎல் முடிந்த பிறகு நடைபெற வாய்ப்புள்ளது.

- Advertisement -

அறுவை சிகிச்சை ஏன்?

பலர் ரோஹித்தின் நீண்ட நேரம் ஆடும் திறனை விமர்சித்துள்ளனர், ஆனால் அவரது தொடை தசை பிரச்சினையால் நீண்ட நேரம் விளையாட முடியாமல் அவதிப்பட்டு இருக்கலாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர்,
“ரோஹித் 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால், இப்போது அறுவை சிகிச்சை செய்ய சரியான நேரம். கேப்டன்ஷிப் கடமைகள் காரணமாக அவர் இதை பல ஆண்டுகளாக தள்ளி வைத்தார்.ஆனால் இப்போது அட்டவணை அவருக்கு முழுமையாக குணமடைய வாய்ப்பளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

ஒருநாள் போட்டிகளின் அட்டவணை பெரிய அளவு இல்லாததால், ரோஹித்துக்கு உடல் தகுதியை மீட்க போதுமான நேரம் இருக்கும். 2016 நவம்பரில் அவர் வலது மேல் தொடை தசை அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்களில் மீண்டார். இந்த தொடை தசை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3-4 மாதங்களில் ரோஹித் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற உள்ளது.

- Advertisement -

எப்போது ரோகித் திரும்புவார்?

ஆனால் வங்கதேச அரசு இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், அந்த தொடர் நடைபெறுவது உறுதியாகவில்லை. அது நடந்தாலும், இந்திய அணியின் அடுத்த பணி 2025 ஆசியக் கோப்பை ஆகும். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் காரணமாக அந்த தொடரின் எதிர்காலமும் உறுதியாகவில்லை.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. முதல் 2 இடம் பிடிக்கும் அணி எது? கோப்பையை வெல்லப் போவது யார்? அபினவ் முகுந்த் கருத்து

அடுத்த உறுதியான ஒருநாள் தொடர் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும்.எனவே, 2025 ஐபிஎல் முடிந்தவுடன் ரோஹித் அறுவை சிகிச்சை செய்ய சரியான நேரமாக இருக்கும். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் அழுத்தங்கள் இல்லாததால், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு ரோஹித் தனது திட்டங்களை அமைக்க முடியும்.

- Advertisement -