ஐபிஎல் 2025.. முதல் 2 இடம் பிடிக்கும் அணி எது? கோப்பையை வெல்லப் போவது யார்? அபினவ் முகுந்த் கருத்து

0
22

ஐபிஎல் 2025 பிளே ஆப் போட்டிகளுக்கான மைதானங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. முதல் குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் சண்டிகரில் உள்ள புதிய பிசிஏ மைதானத்தில் நடைபெறும். இது பஞ்சாப் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமாகும். இரண்டாவது குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்.

இதனிடையே, இந்த சீசனில் எந்த அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளன என்பது குறித்து தங்கள் வருண் ஆரோன், அபினவ் முகுந்த் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், முதல் குவாலிஃபையர் போட்டி சண்டிகரில் உள்ள புதிய பிசிஏ மைதானத்தில் நடைபெறுவதை வரவேற்றுள்ளார்.

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு சாதகம்

கடும் நெருக்கடி ஏற்படும் போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அணிக்கு பெரிதும் உதவும் என ஆரோன் கூறியுள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி இந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், “பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடப் போகிறார்கள், கடும் நெருக்கடியில் ஒரு அணிக்கு வேண்டியது, ரசிகர்கள் முழுமையாக ஆதரவு தான். அது தற்போது பஞ்சாப் கிங்ஸ்க்கு கண்டிப்பாக கிடைக்கும்.

பஞ்சாப் ரசிகர்கள் தங்கள் அணி உள்ளூரில் எலிமினேட்டர் அல்லது குவாலிஃபையர் ஆடுவதை இதுவரை பார்த்ததில்லை. இது ஒரு முக்கியமான ஆட்டமாக இருக்கும், மேலும் அவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று ஆரோன் தெரிவித்தார்.முன்னாள் இந்திய டெஸ்ட் வீரர் அபினவ் முகுந்த், பிளேஆஃப் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, கொண்டார். குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆண்டு தங்கள் இரண்டாவது கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார்.

- Advertisement -

குஜராத் அணி வெல்லும்:

இது குறித்து பேசிய அவர், “குஜராத் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகிறது, எனவே மைதானம் அவர்களுக்கு முக்கியமில்லை. ஆனால், அவர்கள் முதல் இரண்டு இடங்களில் முடிக்க வேண்டும்.இந்த சீசனில் அவர்களின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, ஜிடி முதல் இரண்டு இடங்களுக்கு உறுதியான வாய்ப்பு உள்ளது.”

இதையும் படிங்க: நாங்க கடைசி இடத்துல இருக்க தகுதியான ஆளுங்க.. எங்க பேட்டிங் ஆர்டர் தப்பு கிடையாது – சிஎஸ்கே பிளமிங் கருத்து

“சிஎஸ்கே-க்கு எதிரான அவர்களின் கடைசி ஆட்டத்தைப் பார்க்கும்போது, குஜராத் டைட்டன்ஸ் குறைந்தபட்சம் 20 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் முடிப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். பஞ்சாப்க்கு இது கடினமான ஆட்டம், அவர்கள் டெ ல்லி கேபிடல்ஸை எதிர்கொள்ள வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை பஞ்சாப் மற்றும் டெல்லியை விளையாடுகிறது.

- Advertisement -