அஸ்வினை தாண்டி ரோஹித் சர்மா படைத்த வித்தியாச சாதனை.. கேப்டனையும் விடாத கம்பீர்.. மாஸ் பிளான்

0
617
Rohit

இன்று இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வித்தியாசமான பட்டியலில் இணைந்திருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் என்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அந்த அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து அவிஷ்கா பெர்னாடோ 62 பந்தில் 40 ரன்கள், குசால் மெண்டிஸ் 42 பந்தில் 30 ரன்கள், கேப்டன் சரித் அசலங்கா 42 பந்தில் 25 ரன்கள், துனித் வெல்லாலகலே 35 பந்தில் 39 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 44 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்கள். இலங்கையணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர்கள் பந்து வீசி, ஒரு மெய்டன் செய்து, 30 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்களுக்கு ஒரு மெய்டன் செய்து, 33 ரன்கள் விட்டுத்தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நாட்கள் கழித்து பந்து வீசினார். இரண்டு ஓவர்கள் பந்து வீசிய அவர் 11 ரன்கள் விட்டுத் தந்தார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் அதிக வயதில் பந்து வீசிய சுழல் பந்துவீச்சாளர் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினை தாண்டி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இந்திய அணியின் டாப் ஆர்டரில் இருக்கக்கூடியவர்கள் பந்து வீச வேண்டுமென்று விரும்புகிறார். இதன் மூலம் பேட்டிங் வரிசையை நீளமாக்க முடியும், அதே நேரத்தில் கேப்டனுக்கு பந்துவீச்சு ஆப்ஷன்கள் நிறைய இருக்கும். சிறிய அணிகளில் கூட நிறைய பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இருக்க இந்திய அணி இந்த விஷயத்தில் தடுமாறி வந்தது. தற்பொழுது கம்பீர் பயிற்சியாளராக வந்து இந்த விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜாகீர் கான் வரிசையில்.. அரிய சாதனையை செய்த முகமது சிராஜ்.. 14 வருடங்களுக்குப் பிறகு அரிய நிகழ்வு

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வயதில் இந்திய கிரிக்கெட்டில் பந்து வீசிய சுழல் பந்துவீச்சாளர்கள் :

38 வயது 329 நாட்கள் – சச்சின் டெண்டுல்கர்
37 வயது 351 நாட்கள் – எஸ்.வெங்கடராகவன்
37 வயது 096 நாட்கள் – ரோஹித் சர்மா*
37 வயது 021 நாட்கள் – ரவி அஸ்வின்

- Advertisement -