இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் முதல் ஓவரிலேயே சாதனை படைத்து இந்திய வீரர்களில் பிரவீன் குமாருக்கு அடுத்த இடத்தில் 14 வருடங்கள் கழித்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கு பெற்ற விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷான்கா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் இந்திய அணியின் தொடக்க ஓவரை முகமது சிராஜ் வீசினார்.
சிராஜ் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட நிஷான்கா அவுட்சைடாக வீசப்பட்ட பந்தை அடிக்க முயல, பந்து விக்கெட் கீப்பர் கே எல் ராகுலின் கைகளில் தஞ்சம் அடைந்தது. இதனால் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி நிஷான்கா வெளியேறினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே பேட்ஸ்மேனை அவுட் ஆக்கிய நான்காவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை முஹமது சிராஜ் பெற்றார்.
முதன் முதலாக 1999ஆம் ஆண்டு இந்திய வீரர் டி மொகந்தி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பேட்ஸ்மேன் ரிட்லி ஜேக்கப்ஸை முதல் பந்திலேயே வெளியேற்றினார். அதற்குப் பிறகு ஜாகிர் கான் 2001ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக மேத்யூ சின்க்ளேரையும், 2002ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஜெயசூர்யாவையும், 2007ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மைக்கேல் கிளார்க்கையும், 2010ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக பிரவீன் குமார் தரங்காவை வெளியேற்றினார்.
இதையும் படிங்க:10 வருஷமா ஓபனிங் ஆடி இருக்கோம்.. ரோகித் என்ன பாத்து இந்த விஷயத்தை திரும்ப செய்வார் -ஷிகர் தவான் பேட்டி
அதற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இதே சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சிராஜ் நான்காவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். தற்போது வரை முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 26.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.






