சிக்ஸர்களில் சாதனை படைத்த ஹிட்மேன் ரோகித் சர்மா!

0
46
Rohit sharma

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த 20 20 உலகக் கோப்பை போட்டியோடு விராட்கோலி இருபது-20 இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்தும், இதே ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்!

இதையடுத்து மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்புக்கு வந்தார். மேலும் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் புதிய அணி ஊழியர்கள் என இந்திய அணி மொத்தமாய் மாற்றி அமைக்கப்பட்டது!

- Advertisement -

இந்திய அணியின் முழுநேர கேப்டனாய் ரோகித் சர்மா இதுவரையில் மொத்தம் 8 தொடர்களில் இருந்திருக்கிறார். இந்த எட்டு தொடர்களிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது. முழுநேர கேப்டனாய் விராட் கோலி தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களில் வென்றிருக்கிறார் மகேந்திர சிங் தோனி 8 தொடர்களில் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

பொதுவாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் பிரச்சனையாக இருந்தது முதலில் பேட் செய்வதுதான். முதலில் பேட் செய்யும் போது ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை நிர்ணயிப்பது இந்திய அணிக்கு பிரச்சனையாக இருந்து வந்தது. காரணம் இந்திய அணி தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கடைபிடிக்கவில்லை. புதிய கேப்டனாக ரோகித் சர்மா பதவியேற்ற பிறகு இது முற்றிலும் மாறி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்தாலும் இரண்டாவதாய் பேட்டிங் செய்தாலும் அதிரடியான ஆட்டத்தையே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்கிறார்கள்.

ஒரு அணியின் தலைவனாய் ரோகித் சர்மாவும் அணியின் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாய் தானே அதிரடியான ஆட்டத்தில் இறங்கி வழிகாட்டுகிறார். 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் மகேந்திர சிங் தோனியால் துவக்க வீரராக கொண்டுவரப்பட்ட ரோகித் சர்மா தனது இயல்பான அதிரடி ஆட்டத்தால் எதிரிகளை மிரள வைக்கும் ஒரு பேட்ஸ்மேன் ஆகியிருக்கிறார்!

- Advertisement -

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த நான்காவது இருபது20 போட்டியில் 16 பந்துகளில் 33 ரன்கள் ரோகித் சர்மா அடித்தார். இது என்ன இரண்டு பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடக்கம். இந்த மூன்று சித்தர்களின் மூலம் உலக கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த அவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ஷாகித் அப்ரிடியை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் ரோகித் சர்மா!

1998 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்ஸர்களையும் 398 ஒருநாள் போட்டிகளில் 351 ஒரு சிக்ஸர்களையும் தொண்ணூத்தி ஒன்பது டி20 போட்டிகளில் 73 சிக்ஸர்கள் என மொத்தம் 476 சிக்சர்களை சாகித் அப்ரிடி விளாசி இருக்கிறார்!

- Advertisement -

ரோகித் சர்மா 45 டெஸ்ட் போட்டிகளில் அறுபத்தி நான்கு சிக்ஸர்கள், ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்கள், நூத்தி முப்பத்தி ஒரு டி20 போட்டிகளில் 163 சிக்ஸர்களையும் என 477 சிக்ஸர்களை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்!