ரோஹித் ஸ்டார்க்கிட்ட கவனமா இருங்க.. ஏன்னா அவர்கிட்ட இந்த விஷயத்துலதான் மாட்டுவீங்க – சுனில் கவாஸ்கர் அறிவுரை

0
60

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு நன்றாக இருந்த போதிலும் பேட்டிங் முற்றிலுமாக சொதப்பியது. இளம் வீரர்கள் தடுமாறினாலும் அணியின் மூத்த வீரர்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் மோசமான ஆட்டம் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூன்று போட்டியிலும் தோல்வி அடைய முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சில முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். போட்டியின் தொடக்கத்தில் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அதற்கு பிறகு ரோகித் சர்மாவுக்கு ஆடுகளம் சாதகமாக அமையும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவுக்கு சுழல் கவாஸ்கர் அறிவுரை

இதுகுறித்து அவ்வாறு விரிவாக கூறும்போது “தொடக்கத்தில் ரோகித் சர்மா மிட்சல் ஸ்டார்க்கின் லைன் மற்றும் லென்த்தில் சிரமப்படுவார். ரோகித் சர்மாவுக்கு அடிக்கடி நடப்பது என்னவென்றால் போட்டியின் தொடக்கத்தில் சில ஓவர்கள் அவரது கால் அசைவதில்லை. அதனால் அவர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். ஆனால் முதல் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் நிதானமாக விளையாடினால் அவரால் ரன்கள் குவிக்க முடியும். அவர் ஷாட் தேர்வை சரியாக எடுக்க வேண்டும் இது அவருக்கு மட்டுமல்ல இந்த ஒரு பேட்டருக்கும் முக்கியம்.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு கிடைக்கிற அந்த வசதி எங்களுக்கு இல்ல.. இது எரிச்சலா அபத்தமா இருக்கு – கிளாசன் வருத்தம்

நான் சொன்னது போல ஆஸ்திரேலியா ஆடுகளும் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதிலும் அவர்கள் கூகபுரா வகையான பந்தினை பயன்படுத்துகிறார்கள். முதல் பதினைந்து ஓர்களுக்கு பிறகு அது ஸ்விங் ஆகவோ அல்லது அதிகமாக சீம் ஆகவும் செய்யாது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஐந்து நாள் ஆட்டம் என்பதால் இதில் பொறுமையாக விளையாட வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -