இந்திய அணிக்கு கிடைக்கிற அந்த வசதி எங்களுக்கு இல்ல.. இது எரிச்சலா அபத்தமா இருக்கு – கிளாசன் வருத்தம்

0
2978
Klaasen

இந்திய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பதிலாக 5 போட்டிகள் கொண்ட டி20 இருந்திருக்க வேண்டும் என தென் ஆப்ரிக்க வீரர் ஹென்றி கிளாசன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளையும் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கின்றன. இந்த நிலையில் நாளை நடைபெறும் நான்காவது போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியால் தொடரை சமன் செய்ய மட்டுமே முடியும். எனவே இது அபத்தமான ஒன்றாக இருப்பதாக கிளாசன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

குறைந்த போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

முன்பு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. ஆனால் தற்பொழுது அந்தத் தொடர் 2 போட்டிகள் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது. இப்படியான தொடரில் முதல் போட்டியை ஒரு அணி வென்று விட்டால், அந்த அணி தொடரை இழக்காது. அதேபோல முதல் போட்டியை தோற்கும் அணியால் தொடரை சமன் செய்யவே முடியும் வெல்ல முடியாது.

கடினமான கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தை சிறப்பாக விளையாட சில நாடுகள் மட்டுமே இருக்கின்றன. இப்படியான சில நாடுகளில் முக்கியமான தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது கிரிக்கெட் ஆரோக்கியமானது அல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது அபத்தமாக இருக்கிறது

இது குறித்து ஹென்றி கிளாசன் கூறும் பொழுது ” நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட நாங்கள் விரும்பவில்லை. இது பொருத்தமான ஒன்றாக இல்லை. எங்கள் வீரர்கள் இந்தியா போன்ற கிரிக்கெட் நாட்டுக்கு எதிராக அதிக போட்டிகள் விளையாட விரும்புகிறார்கள். நாளைய போட்டிகள் நாங்கள் வென்று ஞாயிற்றுக்கிழமையும் ஒரு போட்டி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்”

இதையும் படிங்க : பும்ரா மற்ற பவுலர்ஸ் விட ஸ்பெஷலா இருக்க இதான் காரணம்.. ஆனா நான் அவரை ஈஸியா சமாளிப்பேன் – ஆஸி வீரர் பேட்டி

“இருந்தபோதிலும் நாங்கள் எப்பொழுதும் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடக்கூடிய வகையில் அட்டவணை தரப்படுகிறது. இது எங்களை மிகவும் எரிச்சல் ஊட்டக் கூடியதாக அபத்தமான ஒன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் ஒரே நேரத்தில் உலகில் இரண்டு பகுதிகளில் விளையாடுகிறது. இப்போதைக்கு நாங்கள் இதை விட்டுவிட்டு தொடரை இழக்காமல் இருப்பதற்கான வழிகளை பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -