இந்திய அணியில் எட்டு பேருக்கு என்னால பவுலிங் பண்ணவே முடியாது.. அடி பிரிச்சுடுவாங்க – வருண் சக்கரவர்த்தி பேச்சு

0
0

​அஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு பிறகு, தற்போதைய இந்திய பேட்டிங் லைன்-அப்பிற்கு எதிராக ஸ்பின் பவுலிங் செய்வது மிகவும் கடினம் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.

​டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அஃப்கானிஸ்தான் அணியை 156 ரன்களுக்குள் இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணி அபிஷேக் சர்மாவின் அதிரடி 82 ரன்கள் மற்றும் இஷான் கிஷனின் 42 ரன்கள் உதவியுடன் 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

​இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், இந்திய பேட்டர்களின் அதிரடி ஆட்டம் குறித்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

​இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி பேசும்போது “டிரெஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்திருக்கும் போது நான் ஒருவரிடம் சொன்னேன், நமது அணியின் பேட்டிங் லைன்-அப்பிற்கு எதிராக யாராலும் ஸ்பின் பந்துவீச முடியாது. அப்படி வீசினால் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கி விடுவார்கள்.

- Advertisement -

“​உலகில் உள்ள எந்தவொரு ஸ்பின்னரையும் எதிர்கொண்டு அடிக்கும் திறன் நமது டாப் 8 பேட்டர்களிடம் உள்ளது. நான் நேரில் அவர்களுக்கு பந்துவீசி பார்த்திருக்கிறேன் என்பதால் அது எவ்வளவு கடினம் என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -