டெஸ்ட் பேட்டிங் ரேங்க் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் கிடு கிடு உயர்வு ; ரவிச்சந்திரன் அஷ்வின் சாதனை!

0
457
Icc

இந்திய அணி தற்போது மேற்கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் பேட்டிங்கில் அறிமுக வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடிக்க, விராட் கோலி அரை சதம் எடுத்தார். பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து மற்றும் ஏழு விக்கட்டுகளை கைப்பற்றி மொத்தம் 12 விக்கெட்கள் வீழ்த்தினார்!

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியின் முடிவுக்குப் பிறகு இந்த நால்வரின் டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் மற்றும் இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விராட் கோலி 14 ஆவது இடத்தில் டெஸ்ட் பேட்மேன்களுக்கான இடத்தில் தொடர்கிறார்.

அதேசமயத்தில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா முதல் 10 இடங்களுக்குள் அதாவது பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் 73 வது இடத்தை தனது முதல் ஆட்டத்திலேயே பெற்றிருக்கிறார்.

மேலும் பந்துவீச்சில் மிக அபாரமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் பலமாக திரும்பி வந்து டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அடைந்திருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் :

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 883 புள்ளிகள்.
டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா 874 புள்ளிகள்.
பாபர் ஆசம் பாகிஸ்தான் 862 புள்ளிகள்.
ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 855 புள்ளிகள்.
மார்னஸ் லபுசேன் ஆஸ்திரேலியா 849 புள்ளிகள்.
ஜோ ரூட் இங்கிலாந்து 842 புள்ளிகள்.
உஸ்மான் கவஜா ஆஸ்திரேலியா 824 புள்ளிகள்.
டேரில் மிச்சல் நியூசிலாந்து 792 புள்ளிகள்.
திமோத் கருணரத்தினே இலங்கை 780 புள்ளிகள்.
ரோகித் சர்மா இந்தியா 751 புள்ளிகள்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள்:

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 884 புள்ளிகள்.
பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 828 புள்ளிகள்.
ககிசோ ரபாடா தென்னாப்பிரிக்கா 825 புள்ளிகள்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 805 புள்ளிகள்.
ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் 787 புள்ளிகள்.
ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 781 புள்ளிகள்.
ரவீந்திர ஜடேஜா இந்தியா 779 புள்ளிகள்.
ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து 777 புள்ளிகள்.
நாதன் லயன் ஆஸ்திரேலியா 775 புள்ளிகள்.
ஜஸ்ட்ப்ரீத் பும்ரா இந்தியா 764 புள்ளிகள்.