ரோகித் தான் இந்தியாவின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் – சேட்டன் சர்மா அதிரடி பேட்டி

0
303
Rohit Sharma

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஆட்டத்தையும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஆட்டத்திலும் வென்று தொடரை முற்றிலுமாக கைப்பற்ற காத்திருக்கிறது. இதற்கிடையே நேற்று இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட போகும் வீரர்களின் விவரத்தை பிசிசிஐ அறிவித்தது. விராட் கோலி பதவி விலகிய நேரத்தில் இருந்தே பலரும் எதிர்பார்த்த அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கும் பிசிசிஐ பதில் கூறியுள்ளது.

டெஸ்ட் அணியின் புதிய மற்றும் நிரந்தர கேப்டனாக படம் எதிர்பார்த்தபடி ரோகித் அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய தேர்வுக்குழு கமிட்டியின் சேர்மன் சேட்டன் சர்மா, ரோகித் தான் தற்போது இந்திய அணியின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் என்று பேசியுள்ளார். மூன்றுவித கிரிக்கெட்டும் அவர் விளையாடி வருவதால் அவருக்கு தேவையான நேரத்தில் ஓய்வு வழங்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் அனுபவ வீரரான ரோகித் தலைமையின் கீழேயே வருங்காலத்திற்கான கேப்டன்களும் கண்டறியப்பட்டு பட்டை தீட்ட படுவர் என்றும் அவர் பேசியுள்ளார்.

- Advertisement -

ரோஹித்தின் உடற்தகுதி குறித்து பேசிய அவர் தற்போது ரோகித் மிகவும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும்
வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் அவர் பேசியுள்ளார். அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு தேவை என்றும் ரோகித் விருப்பப்படும் நேரத்தில் அவர் உடற்தகுதியை கருத்தில் கொண்டு நிச்சயம் ஓய்வு வழங்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். ரோகித் கேப்டனாக இருக்கும் போதே வருங்காலத்திற்கான கேப்டனும் நிச்சயம் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் சேட்டன் சர்மா பேசியுள்ளார்.

ரோகித் தன்னால் முடிந்த அளவு நீண்ட நாட்கள் இந்திய அணியை வழிநடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது என்றும் ரோஹித் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர கேப்டன் என்றும் பேசியுள்ளார். அவர் நீண்ட நாள் கேப்டனாக இருப்பதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள் என்றும் ஒருவேளை ரோஹித்துக்கு ஓய்வு தேவைப் பட்டால் நிச்சயம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார் சேட்டன் சர்மா. புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.