ரோகித் சர்மா இப்படிப்பட்ட கேப்டன்தான்; டி20 உலகக்கோப்பை சாதனை கேப்டன் டேரன் சமி!

0
1942
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி தகுதி சுற்றுப்போட்டிகளோடு எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பித்து நவம்பர் 13 ஆம் தேதியோடு முடிய இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பைக்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்து தயார் நிலையில் இருக்கின்றன!

இதுவரை நடந்துள்ள 7 டி20 உலகக்கோப்பை தொடர்களில் 2 முறை சாம்பியனான ஒரே அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கிறது. இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமை ஏற்று இரண்டு முறை 20 உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக டேரன் சமி இருக்கிறார்.

- Advertisement -

இரண்டு முறை 20 உலகக் கோப்பையை வென்ற சாதனை கேப்டன் பேரன் சமி, ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற சாதனை கேப்டன் ரோகித் சர்மாவை நுண்மையாக அலசி ஆராய்ந்து புகழ்ந்திருக்கிறார்.

ரோகித்சர்மா கேப்டன்சி பற்றி டேரன் சமி முதலில் தெரிவிக்கும் பொழுது ” அவர் கேப்டனாக செயல்படும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால்தான் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி மிகவும் வெற்றிகரமான அணியாக இருந்து வருகிறது. அவர் எப்பொழுதும் தன்னை முன்னிறுத்தும் கேப்டன் கிடையாது. அவர் அணியை முன்னிறுத்தும் கேப்டன்.
அணியின் வீரர்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும் ஒரு கேப்டன் இருக்கும் பொழுது, அங்கு அணிக்காக யார் செயல்படுகிறார்கள் என்று முன்பு வராது, ஒரு அணியாகத்தான் முன்னே வருவார்கள். ரோகித் சர்மா எனக்கு அப்படித்தான் தெரிகிறார் ” என்று கூறினார்.

அடுத்து ரோகித் சர்மா அணிக்குள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் பற்றி பேசியுள்ள டேரன் சமி ” உங்கள் மொபைலில் ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அதை நீங்கள் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். கிரிக்கெட்டில் இப்படி ஒரு பழைய முறை அவர்கள் வெற்றி பெறும் பொழுது சரியாக இருந்தது. ஆனால் அதிக பவுண்டரிகளை விளாசக் கூடிய அணிகள், எப்பொழுதும் நம்மை விட முன்பே இருப்பார்கள். அவர்களிடம் பழைய முறை சரி வராது. இங்கு நாம் முன்னின்று தாக்கி ஆட வேண்டும். அப்படி நாம் தாக்கி ஆடும் பொழுது விரைவாக ஆட்டம் இருந்தாலும் நமக்கு பின் வரக்கூடியவர்கள், பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள் ” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நீங்கள் ஆட்டத்தில் முன்கூட்டியே பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் வைக்க அதிரடியாக விளையாடினால், நீங்கள் விரைவாக விக்கெட்டை இழந்தாலும், உங்களிடம் நல்ல ரன் ரேட் இருக்கும், உங்களுக்கு அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும். இதுதான் இப்பொழுது ரோகித் சர்மாவின் இந்திய அணியின் பேட்டிங் பாணியாக இருக்கிறது. அடுத்து நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் இந்த இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.