இன்னும் 3 சிக்ஸ் அடிச்சாலே போதும்… எவருமே செய்யாத ரெக்கார்டை படைக்கும் ஹிட்மேன் ரோகித் சர்மா; முதல் இந்திய வீரர் ஆவாராம்!

0
863

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா மூன்று சிக்ஸர்கள் அடித்தாலே மிகப்பெரிய சாதனையை படைப்பார். என்னவிதமான சாதனை? மற்றும் சாதனை பட்டியல் பற்றிய விவரங்களை பின்வருமாறு காண்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

மும்பை-பஞ்சாப் அணிகள் இந்த சீசனில் இதுவரை

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து லீக் போட்டிகள் விளையாடி மூன்று வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகள் பெற்று 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்ற பலத்துடன் இப்போட்டியில் விளையாடுகிறது. அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக படுதல்வியை சந்தித்து இந்த போட்டிக்கு வந்திருக்கிறது. ஆகையால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணிக்கு இப்போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சாதனை படைக்க காத்திருக்கும் ஹிட்மேன்

ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மா இதுவரை 247 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் வரலாற்றில் 250 சிக்ஸர்கள் எனும் மைல்களை எட்டுவார். அத்துடன் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

மேலும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 3ஆவது வீரர் எனும் சாதனையையும் படைப்பார். இதனை பஞ்சாப் அணிக்கு எதிராக நிகழ்த்திக் காட்டுவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்:

  1. கிறிஸ் கெயில் – 357 சிக்ஸர்கள் -142 போட்டிகள்
  2. ஏபி டி வில்லியர்ஸ் – 251 சிக்ஸர்கள் – 184 போட்டிகள்
  3. ரோகித் சர்மா – 247 சிக்ஸர்கள் – 232 போட்டிகள்*
  4. எம்எஸ் தோனி – 235 சிக்ஸர்கள் – 240 போட்டிகள்
  5. விராட் கோலி – 229 சிக்ஸர்கள் – 229 போட்டிகள்

கடந்த போட்டியில் 6000 ரன்கள்…

ரோகித் சர்மா கடந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போது, 14 ரன்கள் எட்டிய போது, ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்கள் மைல்கல்லை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் மற்றும் மூன்றாவது இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். ரோகித் சர்மா 232ஆவது போட்டியில் இந்த மைல்கல்லை கடந்தது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி, ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இந்த 6000 ரன்கள் மைல்கல்லை இதற்கு முன்னர் கடந்ததும் குறிப்பிடத்தக்கது.