181ரன்கள்.. தோனி டிராவிட் மெகா ரெக்கார்டு.. இலங்கை தொடரில் ரோகித் சர்மா உடைக்க பெரிய வாய்ப்பு

0
328
Rohit

நேற்று இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கும் இரண்டு தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்கு சூரியகுமார் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் மிகப்பெரிய சாதனைகளை முறியடிக்க இருக்கிறார்.

தற்போது இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் அவர் வீரர்கள் ஃபார்மிலும் உடல் தகுதியிலும் இருந்தால் முடிந்தவரை எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதை நோக்கமாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கேட்டு, பங்களாதேஷ் அணிக்கு எதிராக துவங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இருவருக்கும் மிகப்பெரிய ஓய்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில் கம்பீர் மிகவும் திட்டவட்டமாக எல்லோரும் விளையாட வேண்டும் என்று கூறிவிட்ட காரணத்தினால், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே உடனடியாகத் திரும்பி இருக்கிறார்கள். இதில் ரோகித் சர்மா மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடும் பொழுது, இந்திய அணிக்கு அதிக ரன்கள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அடித்த மூன்றாவது பேட்ஸ்மேனாக சாதனை படைப்பார்.

- Advertisement -

தற்பொழுது சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் மகேந்திர சிங் தோனி நால்வரும் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களாக பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கிறார்கள். மேற்கொண்டு ரோகித் சர்மா மூன்று போட்டிகளிலும் 181 ரன்கள் எடுத்தால், தோனி மற்றும் ராகுல் டிராவிட் இருவரையும் தாண்டி, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பார்.

இதையும் படிங்க : கம்பீர் ஆசைப்படறது இதுக்குதான்.. ரியான் பராக் இருக்க ருதுராஜ் இல்லாமல் போனது எதனால்? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் :

சச்சின் டெண்டுல்கர் – 18,426 ரன்கள்
சவுரவ் கங்குலி – 11363 ரன்கள்.
ராகுல் டிராவிட் – 10889 ரன்கள்.
எம்எஸ் தோனி – 10773 ரன்கள்.
ரோஹித் சர்மா – 10709* ரன்கள்.

- Advertisement -