கம்பீர் ஆசைப்படறது இதுக்குதான்.. ரியான் பராக் இருக்க ருதுராஜ் இல்லாமல் போனது எதனால்? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
787
Ruturaj

இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான அணி அறிவிப்பு நேற்று நடந்தது. இந்த அணி அறிவிப்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று இந்திய தேர்வுக்குழு அறிவித்த இரண்டு இந்திய அணிகளிலும் ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இடம் பெறவில்லை. தற்பொழுது இதில் ருதுராஜுக்கு டி20 அணியில் இடம் தரப்படாத குறித்து தான் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “கில் துணை கேப்டன் என்பது தற்போது பெரிய கதை. ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார் சிறப்பாக செயல்பட்டார் இந்திய அணியும் கோப்பையை வென்றது. ஆனால் அடுத்து அவருடைய பெயர் துணைக் கேப்டனாக இல்லை.

மேலும் இரண்டு அணிகளிலும் ரியான் பராக் பெயர் இடம் பெற்று இருக்கிறது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் அவருக்கு சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ருத்ராஜ் மற்றும் அபிஷேக் சர்மா பெயர்கள் இல்லை. நான் டி20 கிரிக்கெட் பற்றி பேசுகிறேன். இதில் ரியான் பராக் இருக்க அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இல்லாதது ஏதோ ஒன்றை சொல்கிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் டி20 அணிக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே டி20 உலக கோப்பையிலும் இருந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் ரவீந்திர ஜடேஜா இடத்துக்கு கொண்டு வரப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.ரவி பிஸ்னாய் சாகல் இடத்திற்கு இருக்கிறார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : வெறும் 3 ரன்.. மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தோல்வி.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கேவின் டிஎஸ்கே பின்னடைவு.. எம்எல்சி 2024

மேலும் டி20 கிரிக்கெட்டில் யாதவும் தேர்வு செய்யப்படவில்லை. கவுதம் கம்பீர் பெரும்பாலும் ஆல்ரவுண்டர்களை விரும்புகிறார் என்று தெரிகிறது. இப்பொழுது டி20 கிரிக்கெட்டில் சாகல் இடம் நிரப்பப்பட்டு விட்டது. அதே சமயத்தில் அவர் பெயர் ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் இல்லை. இதுதான் விவாதத்திற்கான முக்கிய புள்ளியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -