அழுக்கான முறையில் வீரர்களிடம் பேசுவோம்.. ஆனா அழுக்கான பேச்சுனா என்னனு தெரியுமா? – ரோகித் சர்மா விளக்கம்

0
155
Rohit

தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களுடன் கடினமான அழுக்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டி இருக்கும் எனவும் அதற்கான காரணம் குறித்தும் விளக்கி இருக்கிறார்.

ரோகித் சர்மா 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார். மேலும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் மட்டுமே இப்போதைக்கு தொடர்கிறார்.

- Advertisement -

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை விளையாடுவாரா?

இந்த நிலையில் அதிக போட்டிகள் நடைபெறும் இரண்டு வடிவங்களில் ஓய்வு பெற்று விட்ட காரணத்தினால், ரோகித் சர்மாவுக்கு தேவையான போட்டி பயிற்சி கிடைக்காது. ஏனென்றால் தற்போது சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் மிகவும் குறைவான அளவில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ரோகித் சர்மா தான் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவேனா என்பது குறித்து கூறிய பொழுது அதிரடியாக தான் விளையாட விரும்புவதாகவும், அதன் மூலம் மற்ற வீரர்களுக்கு வேலையை எளிதாக்க விரும்புவதாகவும், அதை செய்ய முடியாவிட்டால் உடனடியாக உலகக் கோப்பைக்கு முன்பாகவே ஓய்வு பெற்று விடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அழுக்கு பேச்சு வார்த்தை அவசியம்

மேலும் அவர் இது குறித்து பங்கு பெற்றிருந்த தனியார் நிகழ்ச்சியில் ஒரு கேப்டனாக அணி வீரர்களுடன் சில கடினமான அழுக்கான பேச்சுவார்த்தை செய்ய வேண்டி இருக்கும் எனவும், ஆனால் அழுக்கான பேச்சுவார்த்தை என்றால் என்னவென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஆர்சிபிக்கு திடீரென நடந்த.. யாரும் எதிர்பார்க்காத 3 செம சம்பவங்கள்.. கப் இந்த வருஷம் உறுதியா?

இதுகுறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது “அணியின் வீரர்களுடன் ஒரு கேப்டனாக அழுக்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது அழுக்கான பேச்சுவார்த்தை என்றால் ஒரு வீரரை ஏன் தேர்வு செய்யவில்லை? ஒரு வீரரை ஏன் பெஞ்சில் அமர வைத்திருக்கிறோம்? என்பது குறித்து அந்த வீரருடன் பேசுவதுதான். இது கடினமானதுதான் ஆனாலும் அணிக்காக செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -