மீண்டும் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு நல்லதும் கெட்டதுமாக நிறைய விஷயங்கள் உள்ளே நடந்து கொண்டிருக்கிறது. திடீர் என சில முக்கிய வீரர்கள் அவர்களுக்கு இறுதி வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் துவங்குகிறது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியில் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
திரும்பி வந்த இரண்டு வீரர்கள்
தற்போது ஆர்சிபி அணிக்கு லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ரோமரியோ ஷெப்பர்ட் திரும்ப வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ஆர்சிபி அணிக்கு இங்கிலாந்தின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் வந்து இணைந்து விட்டார். டிம் டேவிட் அடுத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மீண்டும் பழைய அணி அமைந்துவிட்டது.
அதே சமயத்தில் ஐபிஎல் தொடருக்கு வரமாட்டார் என்று கூறப்பட்ட நட்சத்திர ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் திரும்ப ஆர்சிபி அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. எனவே அவரும் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
கடைசி வரை இருக்கும் வீரர்கள்
அதே சமயத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இருவருமே இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான வெள்ளைப் பந்து தொடர்களில் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் லீக் போட்டியில் மட்டுமே விளையாடுவார்கள். பிளே ஆப் சுற்று போட்டியில் விளையாட முடியாது. இதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஆர்சிபிக்கு ஆதரவாக முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பிஎஸ்எல்-லில் ஆடிவிட்டு.. பாபர் அசாமையே அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர் – ருசிகர சம்பவம்
அதே சமயத்தில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் பில் சால்ட் இருவருமே கடைசிவரையில் ஆர்சிபி அணிக்கு கிடைப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் பிளேயிங் லெவலுக்கு தேவையான நான்கு வெளிநாட்டு வீரர்கள் எப்படியும் நின்று விடுவார்கள் என்று தெரிகிறது. இதன் மூலம் வெளிநாட்டு வீரர்கள் இழப்பால் பெரிதும் பாதிக்கப்பட இருந்த ஆர்சிபிக்கு அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாகவே கருதப்படுகிறது.






