“ரோகித் சர்மாவுக்கு சுயநலமே கிடையாது.. சாதனைகளை கண்டுக்க மாட்டார்!” – தினேஷ் கார்த்திக் ஹர்ஷா போக்லே மனம் திறந்த பாராட்டு!

0
1380
Rohit

இந்திய அணி 2021 ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேடில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முதல் சுற்றில் தோற்று வெளியேறி வந்தது.

இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணுகு முறையையே மாற்றி அமைக்க வேண்டும் என்கின்ற குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது.

- Advertisement -

இந்த நிலையில் புதிதாக கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா மற்றும் புதிதாக தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் இருவரும், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் பொழுது, அதிரடியான அணுகு முறையை காட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதை அணியில் இருக்கும் அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோரை செட் செய்வதுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது. இதற்கு காரணம் பேட்ஸ்மேன்களிடம் இண்டெண்ட் இல்லாமல் இருந்ததுதான். இதை அந்த டி20 உலகக் கோப்பையின் கேப்டன் விராட் கோலி ஏற்றுக்கொண்டார். எனவே அதை மாற்றி அமைக்க முயற்சிகள் செய்யப்பட்டது.

இந்த அதிரடியான அணுகுமுறைக்கு கேப்டன் ரோஹித் சர்மாவே முன் நின்று பேட்டிங்கில் பொறுப்பேற்பதாக அறிவித்தார். அவரே எடுத்ததும் தாக்கி விளையாட ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் சில நேரங்களில் விக்கெட்டுகளை கொடுக்க வேண்டியதாக இருந்தது. இதனால் அவரது ரன் சராசரி குறைந்தது. அதேவேளையில் அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்தது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது
“அவர் அணி பெரிய ஸ்கோர் பெறுவதற்கு, ரிஸ்க் எடுத்து விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். இதை மற்றவர்கள் செய்யத் தவறும் பொழுது நிறைய ஆபத்துகள் உருவாகிறது. சில சமயங்களில் நீங்கள் ரோகித் சர்மா அப்படியான ஷாட்டை விளையாடி இருக்க வேண்டுமா? என்று நினைக்கிறிர்கள். ஆனால் ரோகித் சர்மா தன்னலமற்றவர். அவர் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!

அதே நேரத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறும் பொழுது ” அவரது சராசரி கொஞ்சம் குறைந்து இருக்கிறது. ஆனால் அது வியத்தகு அளவில் கொஞ்சம் கொஞ்சமாகவே குறைந்திருக்கிறது. ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 90 ல் இருந்து 105 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் ரோஹித் சர்மா தன்னுடைய அணிக்கு ஒரு செய்தியை அறிவிக்கிறார்.

என்னவென்றால் அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு நல்ல டெம்போவை அமைப்பது. 360 பெண்களுக்கு இரண்டு விக்கெட் என்பதை விட, 360 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்பது அனைவரும் பங்களித்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. ரோகித் இப்படிப்பட்ட அடித்தளத்தைத்தான் அமைக்க விரும்புகிறார். அவர் அதற்காகத்தான் வேகமாக 65 ரன்களுக்கு செல்கிறார்” என்று கூறியிருக்கிறார்!