போட்டியின் நடுவே மைதானத்தில் நேர்ந்த சோகம்.. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ரோகித் சர்மா!

0
1293

போட்டியின் நடுவே ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

பங்களாதேஷ் டாக்கா மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா இரு அணிகளும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

- Advertisement -

போட்டியின் ஒன்பதாவது ஓவரின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மா, வேகமாக வந்த பந்தை பிடிக்க முயற்சித்த போது, தவறுதலாக கட்டை விரலில் பட்டு தவறி சென்றது. உடனடியாக உள்ளே வந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்து, கட்டை விரலில் வீக்கமாக இருந்ததால் வெளியில் அழைத்துச் சென்றிருந்தார்கள்.

வீக்கம் பெரிதாக இருந்ததால் கட்டைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க கூடும் என்கிற அடிப்படையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வந்திருக்கிறது.

தற்காலிகமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவரால் விளையாட முடியாது. உடனடியாக ஒருநாள் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் தெரிகிறது.

- Advertisement -

அத்துடன் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க இருப்பதால் அதற்குள் குணமடைவாரா? என்கிற கேள்விகளும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது வரை வந்த தகவலின்படி, சிறிய அளவிலான காயமாக தான் தெரிகிறது. முழுமையான ஸ்கேன் ரிப்போர்ட் வெளிவந்த பிறகு எதுவும் தெரிவிக்கப்படும் என்று மருத்துவ குழுவினரால் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2வது ஒருநாள் போட்டி..

முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் அணி 10 ஓவர்கள் முடிவில் 44 ரன்களுக்கு இரண்டு விக்கெடுகளை இழந்து சற்று தடுமாறி வருகிறது. இரண்டு விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் கைப்பற்றினார். களத்தில் சான்டோ மற்றும் சகிப் அல் ஹாசன் இருவரும் இருந்தனர்.

இன்றைய போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களம் கண்டது. ஆல் ரவுண்டர் சபாஷ் அகமது வெளியில் அமர்த்தப்பட்டு, முதல் போட்டியில் வெளியில் இருந்த அக்சர் பட்டேல் உள்ளே வந்திருக்கிறார். அடுத்ததாக இளம் வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென்-க்கு பதிலாக உம்ரான் மாலிக் உள்ளே வந்திருக்கிறார்.