நேற்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்கு பிறகு அபிஷேக் சர்மாவுக்கு ரோஹித் சர்மா பேட்டிங் ஆலோசனைகள் கூறியதற்கு வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மெதுவான ஆடுகளத்தில் தடுமாறி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை அணி 18.1 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
அபிஷேக் ஷர்மாவின் அதிரடி தடுமாற்றம்
இந்திய டி20 அணி மற்றும் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடக் கூடியவராக இருக்கிறார். அதே சமயத்தில் அவர் எந்த இடத்தில் கொஞ்சம் பொறுமையை காட்ட வேண்டும் என்பதில் பின்தங்கி இருக்கிறார். நேற்று முதல் பந்து இறங்கி வந்து அடித்துக் கொடுத்த கேச்சை வில் ஜேக்ஸ் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சுதாரித்து 30 ரன்கள் மேல் எடுத்தார்.
இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா அபிஷேக் ஷர்மாவுக்கு பேட்டிங் ஆலோசனைகள் கூறிக் கொண்டிருந்தார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் ஏமாற்றம் தந்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த வீரேந்தர் சேவாக் ரோகித் சர்மா பேட்டிங் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
அவர் மரபு அடி வாங்குகிறது
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “கடந்த 10 ஆண்டுகளில் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் தொடர்களை எடுத்துப் பார்த்தால் அவர் ஒரே ஒருமுறை மட்டுமே 400 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார். இதன் காரணமாக அவர் எனக்கு 500 லிருந்து 700 ரன்கள் எடுக்கும் வீரர் போல் தெரியவில்லை. ஆனால் அவர் நினைத்தால் இதை செய்ய முடியும்”
இதையும் படிங்க : சிஎஸ்கே மேட்ச்சுக்கு முன்ன இதை செய்ய போறோம்.. அவருக்கு வாய்ப்பு தரதே அதுக்குதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி
“அவர் இந்திய கேப்டனான பிறகு பவர் பிளேவில் ரிஸ்க் எடுத்து ரன்கள் எடுக்கக்கூடிய அணுகுமுறையை கொண்டிருந்தார். இதற்காக அவர் தனிப்பட்ட முறையில் தியாகம் செய்வதாக கூறினார். ஆனால் கடைசியில் உங்களிடமிருந்து ரன்கள் வரவில்லை என்றால், உங்களுடைய மரபு தான் காயப்பட போகிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






