சிஎஸ்கே மேட்ச்சுக்கு முன்ன இதை செய்ய போறோம்.. அவருக்கு வாய்ப்பு தரதே அதுக்குதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
100
Hardik

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணியை அடுத்து சந்திப்பதற்கு காத்திருப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்றது. இதைத்தொடர்ந்து நேற்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் சொந்த மைதானத்தில் மெதுவான ஆடுகளத்தை அமைத்து புத்திசாலித்தனமாக ஹைதராபாத் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

- Advertisement -

வான்கடேவில் எல் கிளாசிகோ

இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் தனது எட்டாவது போட்டியை தங்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் எட்டு போட்டியில் நான்கு வெற்றி நான்கு தோல்விகளுடன் சம நிலையில் இருக்கும்.

அதே சமயத்தில் சிஎஸ்கே அணிக்கு அது எட்டாவது போட்டியில் ஆறாவது தோல்வியாக அமையும். இதனால் சீக்கிரத்தில் ப்ளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறவும் நேரும். இதன் காரணமாக இரண்டு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொள்ள இருக்கும் போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கேவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது “சிஎஸ்கே அணிக்கு எதிராக நாங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகின்ற பொழுது மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். மேலும் அது சிறந்த விளையாட்டாக ரசிகர்களுக்கு அமையும். ஆனால் நடுவில் எங்களுக்கு இரண்டு நாட்கள் ஓய்வு இருக்கிறது. இந்த ஓய்வை நாங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம். அதற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அவர்களை உறுதியாக வந்து சந்திப்போம்.

இதையும் படிங்க: SRH அதிரடி இனி எடுபடாது.. மும்பை போட்டு கொடுத்த ஸ்கெட்ச்.. சின்ன பிளான் பெரிய லாபம்.. முழு அலசல்

“எங்கள் அணியில் வில் ஜேக்ஸ் மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். அவர் அற்புதமான ஒரு ஃபீல்டர். அதே சமயத்தில் அவரால் தேவையான நேரத்தில் மிகவும் முக்கியமான ஓவர்களை வீசவும் முடியும். அத்தோடு அவரால் மிக அதிரடியாக விளையாட முடியும். இதன் காரணமாகத்தான் நாங்கள் அவரை தொடர்ந்து எங்கள் அணியில் விளையாட வைத்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -