இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறுகிறார்.
இந்திய அணி சிறப்பான வெற்றி
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் குவித்தது. இந்திய அணியை பொறுத்தவரை ஹர்ஷித்ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஜோடி விரைவில் வெளியேறினாலும் அணியின் துணை கேப்டன் சுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழந்ததும் அவருக்கு பிறகு வரவேண்டிய கேஎல் ராகுல் வராமல் அவருக்கு பதிலாக அக்சார் பட்டேல் களம் இறங்கினார். அக்சர் பட்டேல் 52 ரன்கள் மற்றும் கில் 87 ரன்கள் குவிக்க இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
5வது இடத்தில் அக்சார் பட்டேல்
இந்த சூழ்நிலையில் வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசும்போது “நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் தொடருக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. மீண்டும் விரைவாக ஒருங்கிணைந்து என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள விரும்பினோம். தொடக்க வீரர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது சற்று நீளமான வடிவம் என்பதால் எங்களுக்கு திரும்பி வர நேரமுள்ளது.
இதையும் படிங்க:வெறுப்பா இருக்கு.. எங்களுக்கு வாய்ப்பு இருந்தப்போ அவர்தான் ஆட்டத்தை மாத்துனாரு – பட்லர் ஆதங்கம்
விஷயங்கள் உங்களை விட்டு விலகும் போது அது போய்க்கொண்டே இருக்கும் என்பது அர்த்தமல்ல. எங்கள் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் அக்சார் பட்டேல் இறங்கியதற்கு காரணம் நடுவில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை இருந்தது. ஏனென்றால் இடது கை வீரருக்கு பந்து வீசப் போகும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அவர்களிடத்தில் உள்ளனர் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த இரண்டு வருடங்களாகவே அக்சார் பட்டேல் ஒரு மேம்பட்ட பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார். இன்று அது தெளிவாக தெரிந்தது. எங்களுக்கு ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டதில் அக்சார் மற்றும் கில் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர்” என்று கூறியிருக்கிறார்.






