ரோகித் சர்மா பயந்து குழப்பமாக இருக்கிறார் அவர் கேப்டன் பதவியில் தொடர மாட்டார் – ஹபிஸ் பேச்சு!

0
119
Rohit sharma

ஆசிய கோப்பையில் நேற்று இந்திய அணி ஹாங்காங் அணியுடன் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்தப்போட்டியில் இந்திய அணியின் ரன் மெஷின் அரைசதம் அடித்து அவரது பழைய ஆட்டத்திற்கு திரும்பி இருப்பது சந்தோசமான விஷயம். ஆனால் இன்னொரு புறத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் ரன்களை வாரி வழங்கி விட்டார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் 7 ஓவர்கள் மீதம் இருக்கும் போது களம் புகுந்த சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்களை அடிக்காமல் போயிருந்தால் ஹாங்காங் அணி இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்து இருக்கும். இந்திய அணி 192 ரன்கள் அடித்த போதும் ஹாங்காங் அணி மிகச் சிறப்பாக விளையாடி 152 ரன்கள் எடுத்தது மிகப்பெரிய விஷயம் தான்.

போட்டி முடிவடைய இருந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை மிகவும் கவலை அடையச் செய்தது. அவர் தனது உடல் மொழியால் அதை வெளிப்படுத்தவும் செய்தார். இதை கவனித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

ரோகித் சர்மாவின் இந்த சலிப்பான உடல்மொழி பற்றி பேசி உள்ள முகமது ஹபீஸ் ” ரோகித் சர்மாவின் உடல்மொழியை பாருங்கள். ஆட்டம் முடிந்ததும் ரோகித் சர்மாவின் வெளிப்பாடு இது. 40 ரன்கள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்த போதும் அவர் அதை மகிழ்ச்சியாக உணரவில்லை. டாஸ் போட வரும் பொழுதும் அவரிடம் நம்பிக்கை இல்லை. அவர் பயந்து குழப்பம் அடைந்தார் என்று நினைக்கிறேன். என்னால் அதைப் பார்க்க முடியவில்லை நான் பார்த்த ரோகித்சர்மா. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்க கூடியவர்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கேப்டன் பதவியை அவருக்கு ஒரு சுமையாக இருக்கிறது. அவருக்கு ஐபிஎல் சிறப்பாக அமையவில்லை. சர்வதேச போட்டிக்கு திரும்பும்பொழுது அதுவும் சிறப்பானதாக இல்லை. நாங்கள் நேர்மறையாக விளையாடுவோம் என்று அவர் கூறுகிறார் ஆனால் அது அவர் உடல் மொழியில் பிரதிபலிக்கவில்லை. பேசுவது எளிது ஆனால் அதை செய்வது கடினம். ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டன் சியில் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மகிழ்வதை நான் எப்பொழுதும் பார்த்து இருக்கிறேன். அவர் இப்போது அப்படியில்லை. அவர் தோற்றுப் போய் காணப்படுகிறார் அவர் மீது அதிக அழுத்தம் உள்ளது அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று மிக விளக்கமாக பேசியிருக்கிறார்!