“பிக் மேட்ச் பிளேயர்” 4 கேம் நல்லா ஆடலைன்னு, அவரை குறைத்து எடைபோட நாங்கள் முட்டாள் இல்லை – பென் ஸ்டோக்ஸ் பேட்டி!

0
5912

கடைசி சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக ரோகித் சர்மாவை குறைத்து எடை போட முடியாது என்று சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பென்ஸ் ஸ்டோக்ஸ்.

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் அரை இறுதிச்சுற்றை எட்டி இருக்கிறது. முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

- Advertisement -

இதில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி அடிலெய்டு மைதானத்தில் வருகிற நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தீவிர பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான் காயம் குறித்தும், விராட் கோலியின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம் குறித்தும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா சரியான ஃபார்மில் இல்லை,அது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடியுமா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில், “ரோகித் சர்மா பிக் மேட்ச் பிளேயர். அவரை எக்காரணம் கொண்டும் ஒதுக்கிவிட முடியாது. கடைசி சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவருக்கு நாங்கள் திட்டங்கள் வகுக்காமல் இருக்க முடியாது. எந்த நேரமும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். இந்த தொடரில் விளையாடும் மிகச்சிறந்த டி20 வீரர்களுள் அவரும் ஒருவர்.” என்றார்.

மேலும் விராட் கோலி பற்றி பேசிய அவர், “கடைசி சில ஆண்டுகளில் விராட் கோலி மோசமான விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கிறார். ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு பக்கபலமாக இருந்ததால் தற்போது எத்தகைய பார்மிற்கு திரும்பியிருக்கிறார் என்று பார்த்தோம். அவரைப் போன்ற வீரரை எந்த கட்டத்திலும் தள்ளி வைத்துவிட்டு கிரிக்கெட் போட்டியை யோசிக்க முடியாது. ஏனெனில் தனது அனுபவத்தின் மூலம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.” என்றார்.

சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம் பற்றி பேசும்போது, “தற்போது தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பார்மில் இருக்கிறார். அவர் விளையாடும் சாட்டுகள் பந்துவீச்சாளருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த அரை இறுதி போட்டியில் அவர்தான் திருப்புமுனையாக இருப்பார். அவர் ரன் குவிக்கும் விதத்தை நாங்கள் கட்டுப்படுத்துவதற்கு திட்டங்கள் வகுத்து வருகிறோம். எங்களது திட்டம், திட்டமிட்டபடி சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்.” என பென் ஸ்டோக்ஸ் பேட்டியளித்தார்.

- Advertisement -