3 போட்டி 157 ரன்.. இருந்தும் சச்சினின் மோசமான சாதனை பட்டியலில் இணைந்த ரோஹித் சர்மா.. நல்லா விளையாடியும் இப்படி ஆயிருச்சே

0
273

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தற்போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இளம் வீரர்களைக் கொண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் சீனியர் வீரர்கள் ஒரு நாள் அணிக்கு திரும்பியும் ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்திருக்கிறது.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினாலும் தற்போது ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி மொத்தமாக ஆறு ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. இதில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியில் விராட் கோலி முதல் அணியின் இளம் வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறினாலும் தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மா தனது பணியை சிறப்பாக செய்தார். முதல் போட்டியில் 58 ரன்களும், இரண்டாவது போட்டியில் 64 ரன்களும் மூன்றாவது போட்டியில் 35 ரன்கள் குவித்து தனது பணியை சிறப்பாகவே செய்து விட்டு சென்றார். நல்ல தொடக்கம் கிடைத்தாலும் இந்திய அணி வீரர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டதால் இந்திய அணி இந்த மோசமான தோல்வியை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த மூன்றாவது இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு அசாருதீன் தலைமையில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இலங்கை அணியிடம் இழந்தது. அதற்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி 1997ஆம் ஆண்டு 0-3 என்ற கணக்கில் இழந்தது.

அதற்குப் பிறகு 27 வருடங்களாக இந்திய அணிக்கு பல கேப்டன்கள் மாறினாலும் இதுவரை இலங்கைக்கு எதிரான தொடரை இழக்காமல் இருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா தலைமையில் 0-2 என்ற நிலையில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அசாருதீன் ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த மூன்றாவது இந்திய கேப்டன் என்ற சாதனை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணியை வீழ்த்த.. வீடியோல வந்து ஐடியா கொடுத்தது அவர்தான்.. 2 பேருக்கு நன்றி – சனத் ஜெயசூர்யா வெளியிட்ட தகவல்

டி20 தொடரை இழந்த இலங்கை அணி, அதற்குப் பிறகு வெகுண்டெழுந்து தனது தரமான சுழற் பந்துவீச்சு மற்றும் சிறப்பான பேட்டிங்கின் காரணமாக இந்தியாவை விட அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -