இந்திய அணியை வீழ்த்த.. வீடியோல வந்து ஐடியா கொடுத்தது அவர்தான்.. 2 பேருக்கு நன்றி – சனத் ஜெயசூர்யா வெளியிட்ட தகவல்

0
435
Jayasuriya

இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இலங்கை அணியின் லெஜெண்ட் முன்னாள் பேட்ஸ்மேன் சனத் ஜெயசூர்யா இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து சிலருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இலங்கை அணியின் லெஜெண்ட் முன்னாள் பேட்ஸ்மேன் சனத் ஜெயசூர்யா இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து சிலருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அணி மிக பலமாக விளங்கிய காலகட்டமான 1997 முதல் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இதுவரையில் கைப்பற்றாமல் இருந்து வந்தது. மொத்தம் 27 ஆண்டுகளாக பல நட்சத்திர வீரர்கள் இலங்கை பங்களிப்புகள் கொடுத்தபொழுதும் கூட அவர்களால் இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்ற முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், தனது ஜெயசூர்யா இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கு இடைக்கால பயிற்சியாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். எனவே இந்த தொடரில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக இலங்கை அணியை சுருட்டி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே டி20 தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியால் ஒரு போட்டியை கூட வெல்ல முடியவில்லை. இந்திய அணி இறுதியாக 0-2 எனத் தொடரை இழந்தது. இடைக்கால பயிற்சியாளராக வந்த சனத் ஜெயசூர்யாவுக்கு இது பெரிய வெற்றியாக அமர்ந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து தனது ஜெயசூர்யா நன்றி தெரிவிக்கும் பொழுது “சங்ககாரா மற்றும் மலிங்காவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அணி மற்றும் துணை ஊழியர்களை ஊக்கப்படுத்தியதற்காக உங்களுக்கு நான் சிறப்பு நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

லசித் மலிங்கா இந்திய அணிக்கு எதிரான மொத்த தொடரின் போதும் வீடியோ ஜூம் அழைப்பில் வந்து ஆலோசனைகள் சொல்லி இலங்கை பந்து வீச்சாளர்களை வழி நடத்தினார். மேலும் நம்பர் ஒன் அணியான இந்திய அணியை வீழ்த்துவதற்கு பல விஷயங்களை குமார் சங்கக்கரா ஒன்றிணைத்தார். எனவே இந்த இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கம்பீர் அந்த ஒரு இந்திய வீரர் இலங்கைக்கு போதும்.. வித்தைய மிஸ் பண்ணிட்டிங்க – சல்மான் பட் விமர்சனம்

இலங்கை கிரிக்கெட் மிகவும் சரிவில் இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான வெற்றி அவர்களை மிகவும் நம்பிக்கை அடைய வைத்திருக்கிறது. இந்த வெற்றியில் இருந்து அவர்கள் நாட்டு கிரிக்கெட்டில் மீண்டும் மலர்ச்சி ஏற்படும் என அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகிறார்கள்!

- Advertisement -