ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக்கி சூரியகுமாரை கேப்டனாக்கி மாஸ்டர் பிளானில் கொல்கத்தாவை அடித்த மும்பை!

0
3616
Ipl2023

இன்று 16வது ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன!

இந்தப் போட்டிக்கான டாசை ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டன் பொறுப்பு ஏற்று இருந்த சூரியகுமார் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயரில் இருந்தார். மேலும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார்.

- Advertisement -

கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசன் 0, குர்பாஷ் 8 ரன்களில் வெளியேறினார்கள். அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ரானா 5, சர்துல் தாக்கூர் 13, ரிங்கு சிங் 18 ஆகியோர் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய வெங்கடேஷ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு மெக்கல்லம் அடித்த சதத்திற்கு பிறகு, தற்பொழுது தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். 51 பந்துகளை சந்தித்த அவர் ஆறு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் உடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதிக்கட்டத்தில் சுனில் நரைன் 2, ஆண்ட்ரே ரசல் 11 பந்தில் 21 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க கொல்கத்தா அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஹிர்த்திக் சோக்கின் நான்கு ஓவர்கள் பந்து வீசி 34 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க கூட்டணி அதிரடியாக 4.5 ஓவர்களில் 65 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 13 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மிகச் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க ஆட்டக்காரர் இசான் கிஷான் 25 பந்தில் தலா 5 பவுண்டரி மற்றும் சிக்ஸர் உடன் 58 ரன்கள் எடுத்தார். அடுத்து இளம் வீரர் திலக் வர்மா 25 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் சூரியகுமார் 25 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து வெளியேறினார். அடுத்து வந்த வதேரா 6 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து மேற்கொண்டு விக்கட்டை விடாமல் பார்த்துக் கொண்ட மும்பை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை நான்காவது ஆட்டத்தில் பதிவு செய்து கொண்டது. டிம் டேவிட் 24, கேமரூன் கிரீன் 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள். கொல்கத்தா தரப்பில் சுயாஸ் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.