டிவிட்டரில் ரசிகர் ஒருவருக்கு புல் ஷாட் எவ்வாறு அடிக்க வேண்டுமென்று டிப்ஸ் கொடுத்துள்ள ரோஹித் ஷர்மா

0
194
Rohit Sharma Pull Shot

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க தயாராக இருக்கிறது. முதல் டெஸ்டை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி அடுத்த 2 டெஸ்ட் கைகளில் தோல்வியுற்றதால் தொடரை இழந்தது. டெஸ்ட் தொடர் முடிந்ததுமே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ரோகித் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு அறிவிக்கப்பட்டார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை பெற்றுத்த ந்தார் ரோகித். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டதால் தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. அதனால் தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கு ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தற்போது பெங்களூருவில் உள்ள நேஷனல் கிரிகெட் அகடமியில் இணைந்து தன்னுடைய காயத்தை சரி செய்து வருகிறார் ரோகித்.

- Advertisement -

இன்று காலை டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியுள்ளார் ரோகித். ஷாட் பிட்ச் பந்துகளை புல் ஷாட் மூலம் பவுண்டரிக்கு அனுப்புவது ரோஹித்தின் வழக்கம். தற்போதைய கிரிக்கெட்டில் ரோகித் போல இந்த ஷாட்டை திறம்பட ஆடும் வீரரை காண்பது அரிது. அதனால் புல் ஷாட்டை எப்படி ஆட வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். மேலும் அதை சரியாக ஆட முயற்சிக்கும்போது தன்னால் தேவையான அளவு அழுத்தமாக ஆட முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார் அந்த ரசிகர்.

அதற்கு பதிலளித்த ரோகித், பந்துவீச்சாளர் பந்தை ஷாட் லெந்தில் வீசினாலே பேட்டை பயன்படுத்தி பந்து துண்டாய் போகுமளவுக்கு அடிக்க வேண்டியது தான் ஒரே வழி என்று கூறியுள்ளார் ரோகித். ரோகித் தனக்கு பதிலளித்துள்ளதை கண்டு அந்த ரசிகர் மிகுந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். புல் ஷாட் படிப்பதில் மிகவும் திறமைசாலியான ரோகித் காயம் குணமாகி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க தயாராக உள்ளார். மேலும் பல சிறந்த ஆட்டங்களை ரோகித்திடமிருந்து காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.