ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் வென்று கைப்பற்றியது. இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடர் ரோஹித் சர்மாவுக்கு ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடராகும். அவர் 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து டி20 உலகக் கோப்பைத்தொடர் விளையாடி வருகிறார். மேலும் இந்திய வீரர்களில் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிகள் இடம் பெற்ற ஒரே வீர ரோகித் சர்மா ஆவார்.
இந்தத் தொடர் முழுக்க அணியை சிறப்பாக வழி நடத்தி வந்ததோடு, ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் மிகச் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ரோஹித் சர்மா இருக்கிறார்.
மேலும் கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியாவில் வைத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோற்றது, இன்று வரையில் இந்திய அணி ரசிகர்கள் மற்றும் இந்திய அணியை வெகுவாகப் பாதித்திருக்கிறது. தற்போது அதற்கு ரோகித் சர்மா தலைமையிலான அணி டி20 உலகக் கோப்பையை வென்று சரி செய்திருக்கிறது.
ரோகித் சர்மா ஓய்வு பெறுவது குறித்து பேசும்பொழுது “நான் முதன் முதலில் இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில்தான் அறிமுகமானேன். தற்போது இந்திய அணிக்காக நான் விளையாடியிருக்கும் இந்த போட்டியே என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டியாகும். ஓய்வை அறிவிப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்காது. கோப்பையை வென்று விட்டு அறிவிக்கலாம் என்று இருந்தேன். தற்போது கோப்பையை வென்று விட்டேன். எனவே நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அதேசமயத்தில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் பிரில்லியன்டா செஞ்ச ஒரு காரியம்.. உலக கோப்பையே கிடைச்சிருக்கு.. களத்தில் என்ன நடந்தது?
கடந்த 25 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டுக்காக ராகுல் டிராவிட் ஸார் செய்திருப்பதற்கு இந்த கோபிக்கு அவர் மிகவும் தகுதியானவர். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எஞ்சி இருந்தது உலகக்கோப்பை மட்டும்தான். தற்பொழுது அவருடைய அமைச்சரவையில் அதுவும் வந்து சேர்த்து இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.