ரிஷப் பண்ட் பிரில்லியன்டா செஞ்ச ஒரு காரியம்.. உலக கோப்பையே கிடைச்சிருக்கு.. களத்தில் என்ன நடந்தது?

0
19506
Rishabh

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை இறுதிப்போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் ஆப்பிரிக்கா எளிதாக வெல்லும் நிலையில் இருந்த பொழுது ரிஷப் பண்ட் செய்த ஒரு காரியம் மொத்த போட்டியையும் மாற்றியது.

இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால் வெற்றி யாருக்கென்று உறுதியாக சொல்ல முடியாத நிலை இருந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும் கூட, அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடி போட்டியை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் போட்டி யார் பக்கம் என்பது முடிவாகாமல் இருந்தது.

இப்படியான நிலையில் 15 வது ஓவரை வீசிய அக்சர் படேல் 24 ரன்கள் கொடுத்தார். கிளாசன் அந்த ஓவரில் அடி பின்னி எடுத்து விட்டார். இதன் காரணமாக கடைசி ஐந்து ஓவர்களுக்கு பந்துக்கு பந்து ரன் தேவை என்கின்ற அளவில் தென் ஆப்பிரிக்கா பக்கம் 100% வெற்றி இருந்தது.

இப்படியான நிலையில் 17 வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசுவதற்கு முன்பாக, களத்தில் நன்றாகவே இருந்த ரிஷப் பண்ட் காலில் ஏதோ பிரச்சனை என பிசியோவை அழைத்து சிகிச்சை எடுத்து நேரத்தை தாழ்த்தினார். இதுதான் போட்டியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உலகக் கோப்பையை வெல்ல சென்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவுக்கு பிரேக் போட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு கிடைச்ச பசங்கள பத்தி ரொம்ப பெருமையா இருக்கு.. 3-4 வருஷமா இதுதான் பின்னாடி நடந்தது – ரோகித் சர்மா பேட்டி

தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ச்சியான நல்ல வேகத்தில் இருந்தது. பேட்மேன்கள் அடுத்தடுத்து விளையாடி ஆட்டத்திற்குள் இருந்தார்கள். ரிஷப் பண்ட் செய்த இந்த வேலையால் ஒரு இடைவேளை வந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு பேட்டிங்கில் இருந்த மொமெண்டம் குறைந்தது. இதனால் கவனமும் குறையும். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பேசிய முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து கிளாசன் ஆட்டம் இழந்தார். அங்கிருந்து போட்டி அப்படியே திரும்பி இறுதியில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்று விட்டது. தற்போது கிரிக்கெட் வல்லுனர்கள் ரிஷப் பண்ட் செய்த காரியத்தை மிகவும் புகழ்ந்து பேசி வருகிறார்கள்!