யோசிக்காம அவர உட்கார வச்சிடுங்க.. டிவில இந்திய அணி சம்பந்தமா இதை மட்டும் பேசாதிங்க – கவாஸ்கர் பேச்சு

0
58
Gavaskar

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை மறுநாள் நியூயார்க் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி குறித்து சுனில் கவாஸ்கர் இந்திய அணி சம்பந்தமாக முக்கிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு பயிற்சி போட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். அதே சமயத்தில் மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடி அரைசதம் அடித்தார்.

- Advertisement -

இந்தப் பயிற்சி போட்டியில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளை வைத்து பார்த்தால், இந்திய அணி நிர்வாகம் யாருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைக்கிறதோ அவர்களை மட்டுமே விளையாட வைத்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஜெய்ஸ்வால் மற்றும் சாகல் இருவரையும் விளையாட வைக்கவில்லை.

மேலும் விளையாட வைக்கப்பட்ட 13 வீரர்களில் இருந்து, சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி இரண்டு வீரர்கள் கழட்டி விடப்படுவார்கள் என்றும் தெரிகிறது. இதனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வர, ரிஷப் பண்ட் இடது கை வீரராக இருப்பதால் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

தற்போது இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்த டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிதான் தொடக்க ஆட்டக்காரர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி இரண்டாம் பாகத்தில் விளையாடிய விதத்திற்கு அவர் ரோகித் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக இருப்பதே சரி.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா கிடையவே கிடையாது.. இவர் தான் இந்த டி20 உலக கோப்பையில் அதிக ரன் எடுப்பார் – யுவராஜ் சிங் கணிப்பு

மேலும் தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு இடதுகை வலதுகை காம்பினேஷன் பற்றி பேசிக் கொண்டிருப்பது சரியான ஒன்றாக நான் நினைக்கவில்லை. நல்ல வீரர்கள் எப்பொழுதும் நல்ல வீரர்கள். அவர்கள் எந்த இடத்திலும் விளையாட முடியும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அருமையான வீரர்கள். எனவே அவர்கள் சேர்ந்து விளையாடுவது ஒரு பிரச்சனை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -