“ரோகித் விராட் ஆளுமை இல்லாத ஆளுங்க.. அவங்க பேச்சை பாருங்க” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!

0
277
Rohit

இன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி, உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஆசிய கோப்பையில் இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்க இருக்கிறது!

இரண்டாவது சுற்றுப்போட்டிகள் இலங்கை கொழும்பு மைதானத்தில் நடக்க இருக்கின்ற காரணத்தினால், போட்டிகள் மழையின் காரணமாக முழுவதுமாக நடக்குமா? என்கின்ற பெரிய அச்சம் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த மைதானத்தில் மழை அச்சுறுத்தல் என்று நடந்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இதுகுறித்து கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறார்கள். அதே சமயத்தில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கூறும் பொழுது, இலங்கை வானிலையை நம்பவே முடியாது எப்பொழுது வேண்டுமானாலும் மழை வரும் என்று இன்னொரு புறம் அச்சத்தை உருவாக்குகிறார்கள்.

அதே சமயத்தில் இன்றைய நாளில் மழை வந்தாலும் கூட இந்தியா பாகிஸ்தான் போட்டி நாளையும் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது. அதாவது போட்டி எந்த இடத்தில் தடைபட்டதோ அந்த இடத்தில் இருந்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று போட்டிக்கு முந்தைய நாளில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தார்கள். இந்திய தரப்பில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சுப்மன் கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தார். இவர்கள் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டன.

- Advertisement -

இந்திய அணி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் “தலைவராக நீங்கள் குழுவில் அல்லது ஊடகங்கள் முன்னால் பேசும்போது கண்ணைப் பார்த்து பேசுவீர்கள். இப்படியான சிறிய விஷயங்களுக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. அழுத்தம் அதிகமாகும் போது எதிர்த்தரப்பை பற்றி பாராட்டி பேசுவதாக இளைஞர்கள் உணருகிறார்கள். அவர்கள் நல்லவர்கள் சிறந்தவர்கள் என்று பேசுவதாக…

இது ஒரு திறமை சார்ந்த விளையாட்டு என்றாலும் கூட, இது மனநிலை சார்ந்த விளையாட்டு கூட. இந்தியாவில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் மன்னிக்கவும் அவர்கள் பாகிஸ்தானை மிக அதிகமாக புகழ்கிறார்கள். இது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி. விராட் மற்றும் ரோகித் சர்மா எங்களது வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் பாபர் அசாமை புகழ்ந்து பேசுகிறார்கள். இது எங்களுக்கு நல்லது!” என்று கூறி இருக்கிறார்!