“எந்த கேப்டனும் செய்யாத ஒரு வேலைய ரோகித் செஞ்சுகிட்டு இருக்காரு.. பேட்ஸ்மேனா மட்டும் பாக்காதிங்க!” – புஜாரா சுவாரசியமான பேச்சு!

0
3135
Rohit

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை தொடரிலிருந்து ஏதாவது ஒரு பிரச்சனை உருவானால், அந்தப் பிரச்சினையில் இருந்து இந்திய அணிக்கு நடப்பதெல்லாம் நல்லதாகவே நடந்து வருகிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பை முதலில் கேஎல்.ராகுல் விளையாட முடியாததால் இடம் பெற்ற இஷான் கிஷான் மிடிலில் வந்து சிறப்பாக விளையாடினார். அதே தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியால் விளையாட முடியாத போது, உள்ளே வந்த கேஎல்.ராகுல் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார்.

தற்பொழுது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அவர் இல்லாததால் அணியில் ஏற்பட்ட மாற்றத்தில் வந்த சூரியகுமார் யாதவ் மற்றும் வேத பந்துவீச்சாளர் முகமது சமி இருவரும் அற்புதமான செயல்பாட்டை காட்டி இருக்கிறார்கள். இந்திய அணியின் பௌலிங் யூனிட் முன்பை விட பலமாகி இருக்கிறது.

மேலும் தரமான பந்துவீச்சாளர்கள் இருப்பதோடு, களத்தில் ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகின்ற முறை மிகவும் சரியாக இருந்து வருகிறது. அவர் தன்னுடைய பந்துவீச்சாளர்களை இரண்டாவது ஸ்பெல்க்கு எப்போது கொண்டு வருகிறார் என்பது மிக முக்கியமான ஒன்று.

- Advertisement -

இந்த வகையில் முகமது சிராஜ், பும்ரா, குல்தீப் மூவரையும் அவர் இரண்டாவது பந்துவீச்சுக்கு கொண்டு வருவது எல்லா நேரத்திலும் விக்கெட்டை பெற்றுக் கொடுப்பதாக இருந்திருக்கிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் கேப்டன் ஆகவும் ரோகித் சர்மா அதிரடி காட்டி வருகிறார்.

இது குறித்து இந்திய அணியின் வீரர் புஜாரா கூறும்பொழுது “ரோகித் சர்மா முகமது சிராஜை மிடில் ஓவர்களில் எங்கு பயன்படுத்துகிறார் என்பது மிகவும் முக்கியமானது. அவர் அவரை திரும்ப கொண்டு வந்த பொழுதெல்லாம், இந்திய அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனைகள் கிடைத்து இருக்கிறது.

மேலும் ரோகித் சர்மா மிடில் ஓவர்களில் கேப்டனாக இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்துவதில் பயங்கர புத்திசாலியாக இருந்திருக்கிறார். பல கேப்டன்களால் இதை செய்ய முடியவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10 முதல் 40 வரை இருக்கும் ஓவர்கள் ஆட்டத்தில் மிகவும் முக்கியமானது. இது ரோகித் சர்மாவுக்கு மிக நன்றாக தெரியும். இதன் காரணமாக அவர் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு மிகவும் ஆக்ரோஷமாக இருந்து அந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!