ரோஹித் சுயநலவதி.. எதுக்கு கோலிய இறக்கல? பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சரமாரி கேள்வி!

0
681
Rohitsharma

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தாலும், அந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது!

நடைபெற இருக்கிற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் யார்? நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேன் யார்? என்பது இன்னும் கண்டறியப்படாமல் அப்படியே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் எடுக்காதது, பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி குறைந்த ரன்னில் சுருண்டதால், வீரர்களுக்கான அந்தந்த இடத்தை தந்து, அவர்களை சுதந்திரமாக விளையாட வைக்க முடியவில்லை.

இதேபோல் நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்யாத காரணத்தினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி குறைந்த ரன்னில் சுருண்ட காரணத்தினாலும், கண்டறியப்பட வேண்டிய இடத்திற்காக இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பேட்டிங் வரிசையில் முன்னே அனுப்பப்பட்டார்கள்.

இவர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு விளையாடும் அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷான் துவக்க வீரர் இல்லை மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும். ஆனால் சூரியகுமார் லோயர் மிடில் ஆர்டரில்தான் விளையாட வேண்டும். ஆனால் நேற்று சூரியகுமார் விராட் கோலியின் இடத்தில் வந்து விளையாடினார்.

- Advertisement -

பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளமாக இருந்த காரணத்தினால், இந்திய அணி சுலபமாக வெற்றி பெறும் என்று இருந்த நிலையில், வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 விக்கெட்டுகள் இழந்து விட்டது. அப்பொழுது இறுதியாக ரோகித் சர்மா உள்ளே வந்து 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

தற்பொழுது கேப்டன் ரோஹித் சர்மாவின் இந்த செயல் குறித்து பாகிஸ்தான் பிரபல பத்திரிக்கையாளர் பரீத் கான் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி இருக்கிறார். அதில் அவர் ரோகித் சர்மாவை சுயநலவாதி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் பிரபல பத்திரிக்கையாளர் பரீத் கான் கூறும் பொழுது ” ஒரு கேப்டனாக உங்களை நீங்கள் சுயநலமற்றவர்களாக காட்ட வேண்டும் என்றால், ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், எதற்காக விராட் கோலிக்கு முன்பாக வந்து பேட்டிங் செய்ய வேண்டும்? ரோகித் சர்மா பேட்டிங்கில் ஏழாவது இடத்திற்கு தன்னைத்தானே கொண்டு வந்தார். ஆனால் வெற்றிக்கான ரன்களை அடிப்பதற்கு கூட விராட் கோலியை விடவில்லை” என்று கூறியிருக்கிறார்!