“ரோகித் அடிச்சது 47 ரன்.. அது நியூசிலாந்து என்ன பண்ணிச்சு தெரியுமா?” – வாசிம் அக்ரம் மாஸ் அப்டேட்!

0
5579
Akram

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் அதிரடியாக நான்கு சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்து அற்புதமான துவக்கத்தை தந்தார்.

- Advertisement -

இந்திய அணி 10 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை சூழ்நிலைக்கு தகுந்தவாறு எடுத்துச் செல்வதற்கு தேவையான ரன்கள் இருந்தது. ரன் அழுத்தம் இல்லாததால் இந்திய பேட்ஸ்மேன்கள் இலகுவாக விளையாடினார்கள்.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முழுக்கவே கேப்டன் ரோஹித் சர்மா இப்படி அதிரடியான துவக்கத்தை கொடுத்து, தனக்குப் பின்னால் வரக்கூடிய வீரர்கள் மீதான ரன் அழுத்தத்தை எடுத்து, அணி நல்ல ஸ்கோருக்கு செல்வதை உறுதி செய்து கொண்டே இருக்கிறார்.

அவருக்கு நிறைய சிறப்பான தொடக்கங்கள் கிடைக்கின்றன. ரோகித் சர்மா பழைய முறையில் விளையாடுவதாக இருந்திருந்தால், இந்த துவக்கங்களை அவரால் பெரிய ரண்களாக குறைந்தபட்சம் மூன்று முறையாவது மாற்றி இருக்க முடியும். ஆனால் அவர் ஒரே முடிவுடன் ஒரே மாதிரி விளையாடி, அணிக்கு தைரியமான மனநிலையை கொடுக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா விளையாடும் முறை யாருக்கு கை கொடுக்குறதோ இல்லையோ, விராட் கோலி அவருடைய இயல்பில் விளையாடுவதற்கு பெரிய உதவியாக இருந்து வருகிறது. அவர் சீராக ரன்களைநெருக்கடி இல்லாமல் இதனால் எடுக்க முடிகிறது. நேற்றைய போட்டியிலும் அதுவே தொடர்ந்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சரியான அணி. இந்திய அணியின் மூன்று துறைகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டன. கேப்டனாக முன் நின்று ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு கேப்டனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தினார்.

ரோகித் சர்மா விளையாடிய ஷாட்களை பாருங்கள். அவர் தன்னுடைய அதிரடி பேட்டிங் அணுகுமுறையால் எதிரணிகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார். அங்கிருந்துதான் இந்தியா 397 ரன்கள் எடுக்க முடிந்தது. மேலும் இந்திய பேட்டிங் தரம் நியூசிலாந்து பந்துவீச்சு தாக்குதலை சாதாரண பாதசாரியாக மாற்றியது!” என்று கூறியிருக்கிறார்!