இந்தியாவோட தோல்விக்கு பிட்ச் தான் காரணமா? அடுத்த மேட்ச் பிட்ச் எப்படி இருக்கும்?- ரோகித் சர்மா பேட்டி!

0
329

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ரோகித் சர்மா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இப்போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வந்தது. டாஸ் வென்று பேட்டிங் முடிவு செய்தது இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி துவக்கத்தில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 88 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் செய்த தவறை மீண்டும் செய்து ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. புஜாரா திகபட்சமாக 59 ரன்கள் அடிக்க, 163 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அபாரமாக பந்துவீசிய நேதன் லயன் 64 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 76 ரன்கள் இலக்கை நிதானத்துடன் விளையாடி கடந்தது.

கவாஜா ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். கடைசி வரை நின்ற ஹெட் மற்றும் லபுஜானே இருவரும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க ஆஸி., அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டால் ஒரு விதமாகவும், வெற்றியடைந்து விட்டால் ஒரு விதமாகவும் பேசுவார்கள். உண்மையில் பிட்ச் ஒரு குறையும் இல்லை. நன்றாக எதிரணி பவுலர்கள் பந்துவீசினார்கள்.

75 ரன்கள் என்பது மிகவும் குறைவான ஸ்கோர். அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயல். முதல் இன்னிங்ஸில் சற்று கூடுதலாக ரன்கள் அடித்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கலாம். பிட்ச்சில் எந்த ஒரு குறையும் இல்லை. நாங்கள் நன்றாக விளையாடியிருக்க வேண்டும்.

அகமதாபாத் பிட்ச் பற்றி எதுவும் திட்டமிடவில்லை. இன்னும் நாட்கள் இருக்கிறது. அதன் பிறகு பிட்ச் எப்படி இருக்கும், அதற்காக எப்படி பயிற்சி செய்வது என்பது பற்றி முடிவு செய்வோம். நேதன் லயன் சரியான லைன் மற்றும் லென்தில் பந்துவீசி எங்களுக்கு திணறலை ஏற்படுத்தினார். இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் கவனத்துடன் செயல்பட்டு இருக்க வேண்டும்.

அதேபோல் குறிப்பிட்ட சிலவீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் இந்த தோல்விக்காக தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து கவனம் செலுத்தி செயல்படுவோம்.” என்றார்.