“கோலி இருந்த வரைக்கும் இந்தியான்னா பீல்ட்டிங்ல டாப், ஆனால் ரோகித் வந்த பிறகு..” – அஜய் ஜடேஜா கடும் சாடல்!

0
1720

ரோகித் சர்மா கேப்டனாக வந்த பிறகு இந்திய அணி ஃபீல்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்று கடுமையாக சாடியுள்ளார் அஜய் ஜடேஜா.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளில் இரண்டு தோல்வி மற்றும் ஒரு வெற்றியுடன் நான்கு புள்ளிகள் பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இன்னும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டிகள் இருக்கின்றன. இரண்டிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் செமி பைனலுக்கு எளிதாக முன்னேறி விடும்.

தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடிய மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக ஃபீல்டிங் என கருதப்பட்டு வருகிறது. ஏனெனில் எளிதாக செய்யக்கூடிய ரன் அவுட் மற்றும் பிடிக்கக்கூடிய கேட்ச் இரண்டையும் தவறவிட்டிருக்கின்றனர்.

இதன் தவறால் தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றி தென்னாப்பிரிக்காவின் பக்கம் வெற்றியை திருப்பினார். விராட் கோலி இருந்தவரை இந்திய அணியில் பில்டிங் மிகச் சிறப்பாக இருந்து வந்தது. ஆசிய கோப்பை தொடர் மற்றும் தற்போது நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடர் இரண்டிலும் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருப்பதை குறிப்பிட்டு ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா.

- Advertisement -

“கடைசியாக இந்திய அணி சிறப்பான ஃபீல்டிங் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தான் வந்தது. ஏனெனில் அணியில் சிறந்த ஃபீல்டர்களுக்கு மட்டுமே இடம் கொடுப்பார். ஆனால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு ஏற்ற பிறகு, இந்திய அணியில் ஃபீல்டிங் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் சரியாக இருந்தால் போதும் என அவர் கருதி விடுகிறார். பேட்டிங்கில் 10-20 ரன்கள் குறைவாக அடித்திருந்தால் அதை ஃபீல்டிங்கில் தான் சரி செய்ய முடியும் என்பதை ஏன் ரோகித் உணரவில்லை.

- Advertisement -

இந்திய அணியில் தற்போது ஃபீல்டர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அஸ்வின் மற்றும் முகமது சாமி எப்பேர்பட்ட ஃபீல்டர்கள்?. பந்துவீச்சை பொறுத்தவரை இவர்கள் இருவரையும் துளியும் குறை கூற இயலாது. ஆனால் ஃபீல்டிங்கில் சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறார்கள் என்று கூறிவிடலாம். இதை வைத்துப் பார்க்கையில் ரோகித் சர்மா ஃபீல்டிங்கிற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.” என கடுமையாக சாடினார்.