6 மாசத்துல ராகுல் டிராவிட், ரோகித் சர்மா உலககோப்பையுடன் வருவார்கள் – இப்போதே கணித்து சொன்ன கங்குலி!

0
3364

ரோகித் சர்மா எதற்கும் பயப்பட வேண்டாம். மிகச்சிறந்த அணி இது. 6 மாதத்தில் உலக கோப்பையுடன் வருவார்கள் என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியின் தோல்விக்கு பின் நம்பிக்கையாக பேசினார் கங்குலி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வந்த இந்திய அணி கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இம்முறை கோப்பைய தட்டிச்செல்லும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

துரதிஷ்டவசமாக இம்முறை நடந்த பைனலில் முதல் நாளில் இருந்தே ஆட்டம் ஆஸ்திரேலியா அணியின் கையில் சென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் மீண்டும் இந்திய அணி தனது பக்கம் இழுத்து வாய்ப்பை உருவாக்கியது. கடைசி நாளில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் பைனலில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இரண்டாவது முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

இதேபோல் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்த்து இருந்தபோது, அரை இறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது. கடந்த ஜூன் மாதம் நடந்த ஆசியக் கோப்பையிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மிகப்பெரிய தொடர்களில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி தோல்வியை சந்தித்து இருப்பதால் இவர்களது தலைமை பொறுப்பு மீது பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன.

இந்நிலையில் பிசிசிஐ முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, இருவரின் மீதும் மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் வருகிற 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக கோப்பையை பெற்றுத் தருவார்கள் என்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசி உள்ளார். கங்குலி பேசியதாவது:

- Advertisement -

“ரோகித் சர்மா கேப்டன்ஷியில் சற்று தயக்கம் இருப்பதுபோல தெரிகிறது. எதற்கும் தயக்கம் வேண்டாம். ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்ஷி செய்வதுபோல இறங்கி அடித்தால் போதும். நம்மிடம் கில், விராட் கோலி, ஜடேஜா, ஹார்டிக், ஷமி, சிராஜ், பும்ரா உள்ளிட்ட தலைசிறந்த பிளேயர்கள் இருக்கிறார்கள். இந்த அணி கூடிய விரைவில் கோப்பையை வெல்லும். ராகுல் டிராவிட் மீது அதீத நம்பிக்கை மற்றும் மரியாதை கொண்டுள்ளேன். கிரிக்கெட்டை அவர் அணுகும்விதம் எப்படியென்று எனக்கு நன்றாக தெரியும். இன்னும் 6 மாதங்கள் உலககோப்பைக்கு இருக்கிறது. கண்டிப்பாக ரோகித்-டிராவிட் கூட்டணி வென்று வருவார்கள்.

கடந்த 10 வருடங்களில் 4 அரையிறுதி, 4 இறுதிப்போட்டியில் நாம் விளையாடியுள்ளோம். இதிலிருந்தே தெரிகிறது நாம் மிகசிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம். கடையில் வெல்ல முடியவில்லை. இது 90 அடித்துவிட்டு ஆடடமிழப்பது போல. அணியின் திறமையில் துளியும் சந்தேகமில்லை. விரைவாக கோப்பையை வெல்வார்கள்.” என்று நம்பிக்கையாக பேசினார் கங்குலி.