“ரோகித்துக்கு கேப்டன் ஆவதில் விருப்பமில்லை.. நான் வற்புறுத்தி ஒன்னு செஞ்சேன்!” – கங்குலி பேசிய சென்சேஷனல் நியூஸ்!

0
1208
Ganguly

2021 ஆம் ஆண்டு இறுதி இந்திய கிரிக்கெட் மோசமான ஒரு ஆண்டாக அமைந்திருந்தது. அப்பொழுதுதான் விராட் கோலி முதல்முறையாக இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கியது. ஆனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக தொடர்வதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

இது அப்போது இந்திய கிரிக்கெட்டில் பெரிய பிரச்சனைகளை உருவாக்கியது. இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் இதுவென்று கூறப்பட்டது.

விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை தெரிவிக்கவில்லை என்று கூற, கங்குலி இது சம்பந்தமாக அதாவது டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகினால், ஒருநாள் கேப்டன் பதவியும் ரத்தாகும் என்று விராட் கோலியிடம் தெரிவித்து இருந்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரு வடிவங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கொண்டுவரப்பட்டார். புதிய பயிற்சியாளராக அந்த நேரத்தில் ராகுல் டிராவிட் கொண்டுவரப்பட்டார். ராகுல் டிராவிட்டை அப்போது கங்குலிதான் தலைமை பயற்ச்சியாளர் பதவிக்கு வற்புறுத்திக் கூட்டி வந்ததாக அவரே தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான்தான் வற்புறுத்தி கூட்டி வந்ததாக இன்னொரு பரபரப்பான தகவலையும் கங்குலி என்று வெளியிட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக அவர் கூறும் பொழுது “மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டிய அழுத்தம் இருந்த காரணத்தினால் ரோகித் சர்மா கேப்டன் ஆகவிரும்பவில்லை. ஆனால் நான் அவருடைய பெயரை கேப்டன் ஆக பொதுவெளியில் அறிவித்து விடுவேன் என்று கூறினேன். அன்று அவர் என்னுடைய பேச்சைக் கேட்டதற்கும் இன்று முன்னணியில் இருந்து அணியைச் சிறப்பாக நடத்துவதற்கும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கேப்டன் ஆனதற்கான பலனை நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கு இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி இன்று மிகச் சிறப்பான நிலைக்கு நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!