ரோகித் பும்ரா.. இம்பேக்ட் கிங்ஸ்.. வெளியில் தெரியாத கதாநாயகர்கள்.. பிரமிப்பூட்டும் புள்ளி விவரங்கள்!

0
702
Bumrah

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மிக அற்புதமானதாகவும் உலகத்தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

இதில் இந்திய அணிக்கு மற்றும் அதிக ரன்கள் குவித்தவரராக விராட் கோலி 711 ரன்கள் எடுத்திருக்கிறார். முகமது சமி ஆறு போட்டிகளில் 23 விக்கெட் கைப்பற்றி இந்திய அணிக்கு மற்றும் அதிக விக்கெட் கைப்பற்றியவராக இருக்கிறார்.

- Advertisement -

தற்போது பேட்டிங்கில் விராட் கோலி பந்துவீச்சில் முகமது சமி என இருவரது முகங்கள் வெளியில் பெரிதாக தெரிய, சத்தம் இல்லாமல் ஒவ்வொரு ஆட்டத்திலும் மிகப்பெரிய இம்பேக்ட்டை கொடுக்கக் கூடிய இரண்டு வீரர்கள் வெளியே இருக்கிறார்கள்.

இப்படியான இம்பேக்ட் தரக்கூடிய வீரர்களாக பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மாவும், பந்துவீச்சில் ஜஸ்ட்பிரித் பும்ராவும் இருக்கிறார். இவர்கள் உண்டாக்கும் தாக்கம் இவர்களை ஒட்டி வரக்கூடிய அடுத்த வீரர்களுக்கு போட்டியை எடுத்துச் செல்வதை சுலபமாக்குகிறது.

கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் 500 ரன்கள் அடிப்பதற்கு ரோகித் சர்மா எடுத்துக் கொண்ட பந்துகள் 527. ஆனால் தற்பொழுது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் பந்துகள் 406. இந்த அளவில் அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்து, அதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதற்கு அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான 80+ ரன்கள் கொண்டு வந்தார். பிறகு இங்கிலாந்துக்கு எதிராக மிகப் பொறுமையாக விளையாடி வெற்றிக்குத் தேவையான 80+ ரன்கள் எடுத்தார். இறுதியாக நெதர்லாந்து அணிக்கு எதிராக 61 ரன்கள் அடித்தார்.

மீதம் நான்கு போட்டிகளில் இந்திய அணிக்கு வலிமையான அதிரடியான துவக்கம் தருவதற்காக 40 ரன்கள் தாண்டி மேற்கொண்டு அதிரடியாக விளையாடச் சென்று ஆட்டம் இழந்தார். ஆனால் ரோகித் சர்மா 40 ரன்கள் தாண்டி ஆட்டமிருந்த எல்லா போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பான ரன்னை குறித்து இருக்கிறது. காரணம் பவர்பிளேவில் தேவையான ரன்களை அவர் கொண்டு வந்து விடுகிறார். இதனால் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையே இருப்பதில்லை.

இதேபோல் பந்துவீச்சில் பும்ரா செயல்பட்டு வருகிறார். அவர் மொத்தம் பத்து போட்டிகளில் விளையாடி 330 ரன்கள் மட்டுமே கொடுத்து 18 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அவர் இதுவரை வீசி இருக்கும் 497 பந்துகளில், 335 பந்துகளை டாட் பந்துகளாக ரன் இல்லாமல் வீசி இருக்கிறார். அவர் ஒவ்வொரு முறை 10 பந்துகள் வீசும் பொழுதும், அதில் 6 பந்துகள் ரன் இல்லாமல் டாட் பந்துகளாக வீசப்படுகிறது.

பும்ரா தனது பந்துவீச்சில் உண்டாக்கும் ரன் அழுத்தம், எதிரணி பேட்ஸ்மேன்கள் மற்ற இந்திய பந்துவீச்சாளர்களை அடிக்க செல்லும் பொழுது, விக்கெட்டுகளாக மாறுகிறது. மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதில் ஒரு பங்கு பும்ராவுக்கு இருக்கிறது.

தற்பொழுது பும்ராவின் மிகப்பெரிய திறமை மற்றும் சிறப்பு என்னவென்றால், அவரால் புதிய பந்து மற்றும் பழைய பந்து என போட்டியில் எந்த நேரத்தில் பந்தை கையில் கொடுத்தாலும் தாக்கத்தை உருவாக்க முடியும். மேலும் ஒரு ஆடுகளம் எப்படி இருக்கிறது? அதில் எப்படி வீச வேண்டும்? என்று அவரால் ஒரே ஓவரில் புரிந்து கொள்ள முடியும்.

பாகிஸ்தானுக்கு எதிரான அகமதாபாத் ஆடுகளம் மெதுவாக இருந்தது. அந்த ஆடுகளத்தில் ஹார்ட் லென்த் வீச வேண்டும். ஒரே ஓவரில் அதைப் புரிந்து அதற்கு ஏற்றபடி பும்ரா வீசினார். மேலும் பழைய பந்தில் சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வானுக்கு ஒரு ஆப் கட்டரை அனுப்பி கிளீன் போல்ட் செய்தார். இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த புத்திசாலித்தனமான பந்து அதுவாகத்தான் இருக்கும்.

அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி 300 ரன்கள் தாண்டி அடிப்பது போல் தெரிந்த நேரத்தில், இறுதிக்கட்டத்தில் வந்த பும்ரா தனது அபார பந்துவீச்சில், அவர்களை 250 ரன்களுக்குள் நிறுத்தினார். இப்படி அவர் சக இந்திய பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்து கொண்டே, ஆட்டத்தில் எங்கெல்லாம் பழைய பந்தில் திருப்புமுனை தேவைப்படுகிறது, அங்கு வந்து விக்கெட்டை எடுப்பவராக இருக்கிறார். ரோகித் சர்மாவின் சிறப்பு ஆயுதமாகவே ஐபிஎல் தொடங்கி பும்ரா இருந்து வருகிறார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் வெளியில் பெரிய அளவில் தெரியாத அல்லது பேசப்படாத கதாநாயகர்களாக பேட்டிங்கில் ரோஹித் சர்மாவும் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும் இருந்து வருகிறார்கள்!